- Prep
- 10 min
- Cook
- 5h
- Total
- 5h 10m
- Serves
- 4
- Cuisine
- tamilnadu
- Course
- Dessert
சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் குலாப் ஜாமூன் சாப்பிடுவார்கள். கோடை நாட்களில் குலாப் ஜாமூன் உடன் ஜஸ்க்ரீம் சாப்பிடுவது வித்தியாசமான உணர்வைத் தரும். கடையில் இருந்து வாங்கும் இந்த ஐஸ்கிரீமை வீட்டிலேயே சுலபமான வழிகளில் செய்யலாம். வாருங்கள், இந்த ரெசிபிக்குள் செல்வோம்.
Ingredients
Method
முதலில் பாலை நன்கு காய்ச்சி ஆற வைக்கவும். இத்துடன்சர்க்கரை, வெனிலா எசென்ஸ், க்ரீம் சேர்த்து கரையும் வரை கலக்கவும்.
ஃப்ரீசரில்,டப்பாவில் ஊற்றி வைக்கவும். 1 மணி நேரம் கழித்து ஃப்ரீசரில் வைத்த இறுக்கமானமூடி கொண்ட ஒரு கலவையை எடுத்து மிக்ஸியில் அரைக்கவும். ஹேண்ட் பிளெண்டரிலும் அரைக்கலாம்.
மறுபடியும் டப்பாவில் ஊற்றி, 1 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்..
குலாப்ஜாமூனை ஒன்றிரண்டாக மசிக்கவும். கடைசி முறை ஐஸ்க்ரீம் கலவையை அரைத்தவுடன் மசித்த குலாப் ஜாமூனை கலந்து விடவும். ஃப்ரீசரில் பரிமாறும் வரை வைக்கவும். பின்பு பரிமாறவும்.






