நம் உணவு முறையில் மாற்றினாலே சர்க்கரை நோயை வராமல் தடுக்க!

- Advertisement -

சர்க்கரை நோய்… இதை சக்கரை நோய், டயாபட்டீஸ், நீரிழிவுன்னும் சொல்வாங்க. இலங்கையில இதை சீனி நோய்னு சொல்றாங்க. சர்க்கரை நோய் ஒரு நோய் இல்லன்னா அது ஒரு குறைபாடுதான். ஆனாலும் ஒட்டுமொத்த மனித குலத்தையும் மிரள வச்சுட்டு இருக்கிற நோய்கள்ல இந்த சர்க்கரை நோயும் ஒண்ணு. இது தொற்று நோய் இல்லன்னாலும் குடும்பத்தில ஒருத்தருக்கு சர்க்கரை பாதிப்பு வந்தா அவரோட சந்ததிக்கும் வர வாய்ப்பு இருக்கு. இந்த நோயைக் கண்டு பயப்பட தேவையில்லன்னாலும் நம்ம சாப்பிடக்கூடிய சாப்பாட்டுல கவனமா இருக்கணும். மருந்து, மாத்திரை சாப்பிடணும்னு அவசியம் இல்லன்னாலும் சில கட்டுப்பாடுகளை பின்பற்றணும். இன்னைக்கி சூழல்ல உடல் உழைப்பு குறைஞ்சுபோனதால கொஞ்சமாவது உடல் உழைப்புக்கு நேரம் ஒதுக்கணும். உடற்பயிற்சி, நடைபயிற்சின்னு போறதுக்கு நேரம் ஒதுக்கிறவங்க வீட்டுல பாத்திரம் கழுவுறது, துணி துவைக்கிறது, வீட்டை சுத்தம் பண்றதுன்னு நேரம் ஒதுக்குனாலே போதும்.

-விளம்பரம்-

அதிக தாகம் அடிக்கடி சிறுநீர்

சர்க்கரை நோய் ஒருத்தரை பாதிச்சா அது வெளிப்படுத்தக்கூடிய அறிகுறிகள் ஆளுக்கு ஆள் மாறுபடலாம். அடிக்கடி சிறுநீர் வெளியேறுறது சர்க்கரை நோயோட அறிகுறிகள்ல ஒண்ணு. சிலபேருக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேற வாய்ப்பிருக்கு. இல்லன்னா அடிக்கடி தாகம் எடுக்கலாம். தாங்க முடியாத பசிகூட சர்க்கரை நோயோட அறிகுறியா இருக்கலாம். இதெல்லாம் இல்லாம சில பேருக்கு பார்வைக் குறைபாடு, எடை கூடுறது, குறையிறதுன்னு பலவிதமான அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். ஒரு இடத்துல புண் வந்து அது ஆறாம இருந்தாலோ, தோல்ல அரிப்பு, சிறுநீர்ல தொற்றுன்னு பலவிதமான அறிகுறிகள்கூட வரலாம். இந்தமாதிரி நேரத்துல பரிசோதனை செஞ்சி பார்த்தா சர்க்கரை நோய் இருக்கான்னு கண்டுபிடிச்சிடலாம்.

- Advertisement -

கொய்யா இலை டீ

ஒருத்தருக்கு சர்க்கரை நோய் வந்துட்டா அவங்க வாழ்நாள் முழுக்க மருந்து, மாத்திரை சாப்பிடணும்னு அவசியம் இல்லை. தொடக்கத்திலேயே அதை கண்டுபிடிச்சிட்டா நிச்சயமா சரி பண்ணிரலாம். முக்கியமா உணவு பழக்க வழக்கங்கள் மூலமே சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுல வைக்கலாம். ரொம்ப கவனமா இருந்தா எந்த மருந்து, மாத்திரையும் தேவையே இல்லை. நாம சாப்பிடக்கூடிய உணவுகள் அதாவது காலைல டீ காபிக்குப் பதிலா கொய்யா இலையை கொதிக்க வச்சி குடிக்கலாம். சீத்தாப்பழ இலையைக்கூட குடிக்கலாம். ஒருநாள் கிராம்பு, ஏலக்காய், பட்டை எல்லாத்தையும் சேர்த்து ஒரு டீ தயாரிச்சு குடிக்கலாம். இந்த மாதிரி உணவு முறையை கொஞ்சம் மாத்திக்கலாம்.

நெல்லிக்காய் நாவல்கொட்டை

காலையில வழக்கமா சாப்பிடக்கூடிய சாப்பாட்டுக்குப் பதிலா பழங்கள் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் பழம் சாப்பிட்டா நோயை கூட்டிவிட்டுரும்னு பயப்பட வேண்டாம். ஆனா, பழம் சாப்பிடும்போது ஒரு மணி நேரம் இல்லன்னா ரெண்டு மணி நேரம் இடைவெளி விட்டுத்தான் அடுத்த உணவை எடுத்துக்கிடணும். சாப்பாட்டுக்கு முன்னாடியும் இதேமாதிரி ஒரு மணி நேரமாவது இடைவெளி இருக்கணும்.

காலையில 11 மணிக்கு வழக்கமா டீ டைம்ன்னு ஒரு நேரத்தை ஒதுக்கி வச்சிருக்கோம். இந்த நேரத்துல வடை, போண்டான்னு எதையாவது சேர்த்துச் சாப்பிடுறது பலபேருக்கு வழக்கமா போச்சு. அந்த மாதிரி உணவுகளை முதல்ல நிறுத்தணும். அதுமட்டுமில்ல காபி, டீ குடிக்கிறதுக்குப் பதிலா அரை ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, அரை ஸ்பூன் நாவல் கொட்டை பொடியையும் மோர்ல கலந்து குடிக்கலாம்.

-விளம்பரம்-

சீரகத் தண்ணீர்

மதிய உணவுல காய்கறிகள், கீரைகள் அதிகமாக இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க. அதுலயும் குறிப்பா கிழங்குகளைத் தவிர்த்து மற்ற காய்கறிகளை சேர்த்துக்கிடணும். பலபேர் வெறுத்து ஒதுக்கக்கூடிய கோவைக்காய், பாகற்காய், கொத்தவரங்காய் மாதிரி காய்கறிகளை சேர்த்துக்கோங்க. வாழைப்பூ, வாழைத்தண்டு சேர்த்துக்கிடலாம். முக்கியமா கசப்பு, துவர்ப்பு உள்ள காய்கறிகளை சேர்த்துக்கிடுறது நல்லது.

மதிய உணவோட சின்ன வெங்காயம் சாப்பிடுங்க. அதேமாதிரி சீக்கிரமா செரிமானமாகிற மாதிரி உணவுகளை சாப்பிடுங்க. அசைவ உணவுகளை சாப்பிடாம இருக்கிறது நல்லது. அப்படியே சாப்பிட்டாலும் அது செரிமானமாகுற மாதிரி வெற்றிலை போடுறது ரொம்ப நல்லது. வெற்றிலை, பாக்கு போடுற பழக்கத்தை சிலபேர் கெட்ட பழக்கம்னு நினைக்கிறாங்க. அது நம்ம சாப்பிட்ட உணவுகள் செரிமானமாக உதவும். சீரகத்தண்ணி குடிக்கலாம். ஓமத்தை வறுத்து வெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம்.

சுக்கு மல்லி காபி

சாயங்காலம் 5 மணிக்கு டீ குடிக்கிற பழக்கம் நம்மள்ல பலபேருக்கு இருக்கு. அதுக்குப் பதிலா ஆவாரம்பூவை டீ செஞ்சி குடிக்கலாம். சுக்கு மல்லி காபிகூட ரொம்ப நல்லது. ஸ்நாக்ஸ் சாப்பிட நினைக்கிறவங்க முளைகட்டிய பயறுகளை பச்சையாவோ, வேக வச்சோ சாப்பிடலாம். முக்கியமா பச்சைப்பயறு சாப்பிடுறது நல்லது. ராத்திரி உணவுல இட்லி, இடியாப்பம்னு ரொம்ப சாதாரணமா செரிமானமாகுற மாதிரி உணவுகளை சாப்பிடுங்க. சில பேர் சப்பாத்தி சாப்பிடுறாங்க.

-விளம்பரம்-

பொதுவா சப்பாத்தி மாதிரி கோதுமை உணவுகள் நம்மளோட உணவே கிடையாது. அதை சாப்பிடுறதால ஒண்ணும் ஆகாதுங்கிறவங்க மட்டும் சப்பாத்தி சாப்பிடலாம். மத்தவங்க சப்பாத்தி, தோசை மாதிரி எண்ணெய்ல தயாரிச்ச உணவுகளை சாப்பிடாம இருக்கிறது நல்லது. அதுக்குப் பதிலா ஆவியில வெந்த உணவுகள் சாப்பிடுங்க. இல்லன்னா சோறு கூட சாப்பிடலாம். ஆனா ராத்திரி உணவை சீக்கிரமா சாப்பிடணும். தூங்கப் போறதுக்கு முன்னாடி திரிபலா சூரணத்தை வெந்நீர்ல கலந்து குடிக்கணும்.

இன்சுலின் சுரக்கும்

இதெல்லாம் இல்லாம காலை நேரத்துல மா இலைக் கொழுந்தை துவரம்பருப்பு சேர்த்துச் சாப்பிடுறது, ஆவாரம்பூவுல துவையல், சட்னி செஞ்சி சாப்பிடுறது நல்லது. காலைல வெறும் வயித்துல நெல்லிக்காய், பாகற்காய் ஜூஸ் குடிக்கிறது நல்லது. ஒரு நெல்லிக்காய்னா அதைவிட ரெண்டு மடங்கு அதிகமா பாகற்காய் சேர்த்து அரைச்சி வெறும் வயித்துல குடிச்சா இன்சுலின் நல்லாவே சுரக்கும். இந்தமாதிரி உணவுமுறைகளை மாத்தினாலே போதும். சர்க்கரை நோயோட பாதிப்பு எதுவும் இல்லாம வாழலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here