- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு எப்போதும் சட்னி தான் செய்வீர்களா?எப்போதும் ஒரே சட்னியை தான் அடிக்கடி செய்வீர்களா? சற்று வித்தியாசமான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் புதினா சட்னி செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், ஹோட்டல் ஸ்டைலில் புதினா சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். முக்கியமாக இப்படி புதினா சட்னியை செய்தால், வழக்கமாக சாப்பிடுவதை விட இரண்டு இட்லி அதிகமாகவே சாப்பிடுவார்கள்.
பொதுவாக நாம் பெரும்பாலும் சமைக்கும் உணவுகளில் மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் பொருள்களில் புதினா இலைகளும் அடங்கும். இந்த புதினா இலைகளைக் கொண்டு சமைக்கப்படும் உணவுக்கு ஒரு தனி சுவையே உண்டு. புதினா சாதம், புதினா சட்னி என பல வகைகளில் புதினா நமது உணவுமுறையில் இடம்பெற்றிருந்தது. புதினா இலைகளில் மருத்துவ குணங்கள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.
இது இயற்கையாகவே மிகவும் பல்துறை ஆகும். இதன் பல்வேறு மருத்துவ குணங்களின் அடிப்படையில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் உணவுப்பொருளாகக் கருதப்படுகிறது. புதினா இலைகளில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் ஏ, சி, டி, ஈ போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
இதன் மூலம் எந்த நாள்பட்ட பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம். இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள புதினாவைக் கொண்டு கண்டிப்பா மறக்காம இந்த சட்னியை ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க. வீட்டில் உள்ள சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை எல்லாரும் இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். வாங்க ஹோட்டல் ஸ்டைலில் புதினா சட்னி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : புத்துணர்ச்சி பெற புதினா டீ போட்டு குடிங்க
Ingredients
Method
முதலில் புதினா இலைகளை எடுத்து தண்ணீரில் அலசி வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, புளி, பச்சை மிளகாய், புதினா, பொட்டுக்கடலை, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி எடுக்கவும்.
இவை நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அதனுடன் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்து ஒரு பவுளில் மாற்றி கொள்ளவும்.
ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான புதினா சட்னி தயார்.






