இந்த வெயிலுக்கு ரொம்ப ரொம்ப இயற்கையாக கிடைக்கக்கூடிய இளநீர், நுங்கு, தண்ணீர் பழம் இதெல்லாம் அடிக்கடி சாப்பிடணும் அப்பதான் நம்ம உடம்பு குளிர்ச்சியா இருக்கும். சில பேருக்கு இந்த வெயில் காலத்துல உடம்பில் பல பிரச்சினைகள் வரும். பருக்கள் அழற்ஜி வேர்க்குரு அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். இது எல்லாத்தையுமே இயற்கையான முறையில் தடுக்கணும் அப்படின்னா இந்த மாதிரி சில உணவுகளை நம்ம சாப்பிடணும். எப்படி இருக்கும்போது இத அப்படியே சாப்பிட பிடிக்கல அப்படின்னா ஏதாவது ரெசிபி செஞ்சு சாப்பிடலாம்.
அந்த வகையில் குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப புடிச்ச ஐஸ்கிரீம் செய்ய போறோம் அதுவும் நுங்கு வச்சு நுங்கு ஐஸ்கிரீம் செய்ய போறோம். குழந்தைகளுக்கு லீவு விட்டு வீட்ல இருக்கிற இந்து சமயத்துல குழந்தைகள் ஏதாவது கேட்டுகிட்டே இருப்பாங்க அதுவும் ஐஸ்கிரீம் அடிக்கடி வாங்கி தர சொல்லி கேட்பாங்க. ஆனா கடையில நம்ம ஐஸ்கிரீம் ஜூஸ் இதெல்லாம் வாங்கித் தருவதை விட வீட்டில் சூப்பரா செஞ்சு கொடுக்கலாம். இந்த சுவையான டேஸ்டான சில ரெசிப்பிஸ் குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க.
அதுலயும் நம்ம வீட்லயே செய்றதால சுத்தமா செஞ்சு கொடுக்கலாம். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் அதை சாப்பிட கொடுக்கலாம். நுங்கு ஐஸ்கிரீம் ஒரே ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க ஒரு தடவை செஞ்சுட்டீங்க அப்படின்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு சுவை சூப்பரா இருக்கும். இந்த நுங்கு ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும் சாப்பிட சாப்பிட சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும் போல தோணும். இப்ப வாங்க இந்த டேஸ்டான சுவையான நுங்கு ஐஸ்கிரீம் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
நுங்கு ஐஸ்கிரீம் | Ice Apple Icecream Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 10 நுங்கு
- 1/2 லி பால்
- 150 கி சர்க்கரை
- 1/2 கப் பிரெஷ் க்ரீம்
- 1/2 கப் மில்க் மெய்டு
- 2 டேபிள் ஸ்பூன் டூட்டி ப்ரூட்டி
செய்முறை
- ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்த நுங்கு சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் பால் சர்க்கரை சேர்த்து அரைத்து எடுக்கவும்.
- ஒரு பெரிய பாத்திரத்தில் பிரெஷ் கிரீம் மில்க் மெய்டு நறுக்கிய நுங்கு அரைத்த விழுது அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- அதனை பிரீசருக்குள் எட்டு மணி நேரம் வைத்து எடுத்து டூட்டி ப்ரூட்டி தூவி பரிமாறினால் சுவையான நுங்கு ஐஸ்கிரீம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சுட்டெரிக்கும் வெயிலுக்கும் இதமா சுவையான நுங்கு மேங்கோ மில்க் ஷேக் இப்படி செய்து பாருங்க!





