- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
இன்ஸ்டன்ட்டா மிக்சர் செய்ய முடியும் அப்படின்னா இந்த உருளைக்கிழங்கு இன்ஸ்டன்ட் மிக்சர செஞ்சு பாருங்க. குழந்தைகள் ஸ்கூல் விட்டு வரும்போது ஏதாவது ஸ்னாக்ஸ் இருக்கான்னு கேட்டுட்டு தான் வருவாங்க. அந்த மாதிரி கேக்குறவங்களுக்கு வீட்ல எந்த ஸ்னாக்ஸுமே இல்லனா பத்து நிமிஷத்துல இந்த சூப்பரான உருளைக்கிழங்கு இன்ஸ்டெட் மிக்ஸர செஞ்சு கொடுங்க சாப்டுட்டு டேஸ்ட்ல அசந்து போயிடுவாங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்து அவங்களுக்கும் இதை செஞ்சு கொடுக்கலாம். டீ காபியோட இந்த மிக்சர் கொடுக்கும் போது அவ்ளோ ருசியா இருக்கும். இந்த ருசியான இன்ஸ்டன்ட் மிக்சர் ரெசிப்பி ஒரே ஒரு தடவை மட்டும் வீட்ல செஞ்சு பாருங்க ரெண்டு மூணு நாளைக்கு ஸ்டோர் பண்ணி வச்சு சாப்பிடலாம்.
கடலை மாவு கரைச்சு அதுல மிக்சர் செய்றதுக்கு நிறைய டைம் ஆகும் அந்த நேரத்துக்கு நீங்க இந்த சூப்பரான உருளைக்கிழங்கு இன்ஸ்டன்ட் மிக்ஸ்ர செஞ்சிடுங்க. சுவையான இந்த மிக்சருக்கு எல்லாரும் போட்டி போட்டுட்டு சாப்பிடுவாங்க ஒரே நாள்ல கூட காலியாகிடும். அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும். ருசியான இந்த மிக்சர் நல்லா மொறு மொறுப்பா அவ்ளோ டேஸ்டா இருக்கும் இதுல பூண்டு கருவேப்பிலை பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் எல்லாமே சேர்த்து சாப்பிடும் போது அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும்.
ரசம் சாதம் சாம்பார் சாதம் புளி சாதம் லெமன் சாதம், தயிர் சாதம் எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா கூட வச்சு சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும் ஒரே ஒரு தடவை மட்டும் இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க டேஸ்ட்டில் அசந்து போயிடுவீங்க. டேஸ்ட்டான இந்த உருளைக்கிழங்கு இன்ஸ்டன்ட் மிக்ஸரை எப்ப எல்லாம் உங்களுக்கு ஸ்னாக்ஸ் சாப்பிடணும் போல தோணுதோ அப்ப எல்லாம் சட்டுனு செஞ்சுக்கலாம். செய்ததும் ரொம்ப ரொம்ப ஈஸிதான் பொட்டுக்கடலை வேர்க்கடலை எல்லாமே வறுத்து சேர்க்கும் போது அதோட வாசனைல சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும்.
இந்த ருசியான மிக்சர் வீட்ல இருக்கக்கூடிய எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதனால இன்னைக்கே கூட இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க. எல்லார் வீட்டுலயும் கண்டிப்பா உருளைக்கிழங்கு இருக்கும் அதனால ஈசியா செய்யலாம் உருளைக்கிழங்கு துருவும் போது கொஞ்சம் பெருசா துருவனும் ரொம்ப சின்ன சின்னதா துருவ கூடாது. இப்ப வாங்க இந்த உருளைக்கிழங்கு இன்ஸ்டன்ட் மிக்சரை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வீட்ல மிக்சர் இருந்தா இந்த பஞ்சாபி ஸ்டைல் மிச்சர் கிரேவி செஞ்சு பாருங்க!
Ingredients
Method
உருளைக்கிழங்கை தோல் நீக்கி துருவி எடுத்துக் கொள்ளவும். அதனை நன்றாக இரண்டு முறை கழுவி காய வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நன்றாக சூடானதும் ஒரு வடிகட்டி வைத்து அதில் தட்டிய பூண்டு சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
கருவேப்பிலை பொட்டுக்கடலை வேர்க்கடலை அனைத்தையும் தனித்தனியாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு உருளைக்கிழங்கை சேர்த்து பொரித்து எடுக்கவும் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதனுடன் மஞ்சள் தூள் பெருங்காயத்தூள், மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறினால் சுவையான இன்ஸ்டன்ட் மிக்சர் தயார்.






