காலை உணவுக்கு ருசியான கம்பு அடை இப்படி செய்து பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!

- Advertisement -

தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இருப்பினும் கொஞ்சம் சிரமப்பட்டு வாரத்தில் ஒரு முறையாவது சிறுதானிய வகைகளை உணவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். சிறு தானிய வகைகளில் முக்கியமானது கம்பு. பனிக்காலத்தில் நமது உடலை சூடாக வைத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகளில் கம்பும் ஒன்று. கம்பு வைத்து செய்யக்கூடிய அனைத்து உணவுகளும் நமக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் தான்.

-விளம்பரம்-

சத்துக்கள் நிறைந்த பொருட்களில் ருசி கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். ருசி நிறைந்த பொருட்களில், சத்துக்கள் மிக மிகக் குறைவு. ஆனால் இது நம்மில் பல பேருக்கு தெரியாது. நாவிற்கு ருசியை தரும் பொருட்களாக தேடித்தேடி சாப்பிடுவோம். இனி உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களில், ருசி கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. நம்முடைய உணவோடு சேர்த்துக் கொள்ளலாம். தானியங்களிலேயே அதிக அளவில் புரதம், கம்பில் தான் 11.8 சதவிகிதம் உள்ளது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, ரிபோஃப்ளோவின், நாயசின், வைட்டமின்கள், தாதுப்புக்கள், மாவுச்சத்து, வைட்டமின் B12, பீட்டா கரோட்டின், நார்ச்சத்து போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

- Advertisement -

மேலும் இரத்த சோகைப் பிரச்சனைக்குத் சிறந்த தீர்வை தருகிறது. கம்பு வைத்து கஞ்சி, களி, புட்டு என்று பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம். வழக்கமாக நாம் ராகி அடை ,பருப்பு அடை என்று செய்து சாப்பிட்டு இருப்போம். மேலும் ஏராளமான மருத்துவ பயன்களை கொண்டுள்ள கம்பில் இன்று நாம் பாரம்பரிய முறையில் கம்பு வைத்து அடையை வீட்டில் சுவையாகவும் எளிமையாகவும் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Print
No ratings yet

கம்பு அடை | Kambu Adai Recipe In Tamil

தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இருப்பினும் கொஞ்சம் சிரமப்பட்டு வாரத்தில் ஒரு முறையாவது சிறுதானிய வகைகளை உணவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். சிறு தானிய வகைகளில் முக்கியமானது கம்பு. பனிக்காலத்தில் நமது உடலை சூடாக வைத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகளில் கம்பும் ஒன்று. கம்பு வைத்து செய்யக்கூடிய அனைத்து உணவுகளும் நமக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் தான். கம்பு வைத்து கஞ்சி, களி, புட்டு என்று பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம். வழக்கமாக நாம் ராகி அடை ,பருப்பு அடை என்று செய்து சாப்பிட்டு இருப்போம். மேலும் ஏராளமான மருத்துவ பயன்களை கொண்டுள்ள கம்பில் இன்று நாம் பாரம்பரிய முறையில் கம்பு வைத்து அடையை வீட்டில் சுவையாகவும் எளிமையாகவும் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: Breakfast
Cuisine: Indian, tamil nadu
Keyword: Kambu Adai
Yield: 4 People
Calories: 361kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 2 கப் கம்பு மாவு
  • 1 கப் முருங்கை கீரை
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் பொடிதாக நறுக்கிய பூண்டு
  • 1 டீஸ்பூன் பொடிதாக நறுக்கிய இஞ்சி
  • 2 டீஸ்பூன் வேர்க்கடலை
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கம்பு மாவுடன் வெங்காயம், முருங்கை இலை, மிளகாய், நறுக்கிய இஞ்சி, பூண்டு, வேர்க்கடலை, உப்பு அனைத்தையும் சேர்த்து கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • பின் ஒரு பெரிய உருண்டையை எடுத்து வாழையிலையில் எண்ணெய் தடவி மாவை வைத்து கைகளால் விரித்து விடவும்.
  • கைகளில் சிறிதளவு தண்ணீர் தொட்டு விரித்தால், நன்கு விரிந்து கொள்ளும்.
  • பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு அதன் மேல் இலையை கவிழ்த்து மெதுவாக மாவை வைக்கவும்.
  • பின் அடையைச் சுற்றி‌ எண்ணெய் விட்டு, ஒரு புறம் வெந்ததும், திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கம்பு அடை தயார். இதற்கு தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை.

Nutrition

Serving: 400g | Calories: 361kcal | Carbohydrates: 6.8g | Protein: 11.9g | Fat: 5.1g | Sodium: 286mg | Potassium: 186mg | Fiber: 8.7g | Calcium: 43mg | Iron: 11.5mg

இதனையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு சாப்பிட ருசியான புடலங்காய் அடை தோசை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!