Advertisement
சைவம்

தமிழரின் பாரம்பரிய கம்பு கூழ் செய்வது எப்படி ?

Advertisement

இன்று நம் தமிழரின் பாரம்பரிய உணவான கூழ் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் தமிழர்கள் அந்த காலத்திலேயே அவர்கள் விவசாயம் செய்யும் ஒவ்வொரு பொருளின் அவர்கள் அறிந்து வைத்துக் கொண்டுதான் அந்த பொருட்களை எல்லாம் விவசாயம் செய்து அதனை சரியான முறையில் பயன்படுத்தினார்கள். அதில் இந்த கூழும் ஒன்றுதான். சிறு தானியங்களை பயன்படுத்தி அவற்றை கூழாக செய்து அதை உணவாக எடுத்துக் கொள்வதால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தால் தான்.

இதையும் படியுங்கள் : தமிழரின் பாரம்பரிய கேப்பை கூழ் செய்வது எப்படி ?

Advertisement

நம் உணவு பட்டியலில் இன்றைக்கு வரைக்கும் முக்கிய இடத்தில் கூழ் இருக்கிறது. ஆனால் நாம் நாவின் ருசிக்காக இன்று பல வகையான உணவுகளை சாப்பிட்டு நம்ம உடம்பை நஞ்சாக மாற்றி கொண்டு இறுக்கிறோம். அந்த விதத்தில் இன்று நாம் கம்பு கூழ் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் நாம் கம்பு கூழ் செய்து சாப்பிடும் போது நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி எந்த நோய்களும் நம் உடம்பில் அண்டாமல் பார்த்துக் கொள்ளும். அதனால் இன்று இந்த கம்பு கூழ் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கம்பு கூழ் | Kammang Kool Recipe in Tamil

Print Recipe
நம் உணவு பட்டியலில் இன்றைக்கு வரைக்கும் முக்கிய இடத்தில் கூழ் இருக்கிறது. ஆனால் நாம் நாவின் ருசிக்காக இன்று பல வகையான உணவுகளை சாப்பிட்டு நம்ம உடம்பை நஞ்சாக மாற்றி கொண்டு இறுக்கிறோம். அந்த விதத்தில் இன்று நாம் கம்ப கூழ் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் நாம் கம்ப கூழ் செய்து சாப்பிடும் போது நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி எந்த நோய்களும் நம் உடம்பில் அண்டாமல் பார்த்துக் கொள்ளும்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Kammang Kool, கம்ப கூழ்
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Advertisement
Servings 4 People
Calories 243

Equipment

  • 1 கடாய்
  • 2 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1 டம்பளர் கம்பு
  • 5 டம்பளர் தண்ணீர்
  • உப்பு தேவையான அளவு
  • 15 சின்ன வெங்காயம் நறுக்கியது
  • 1 கப் தயிர்

Instructions

  • முதலில் ஒரு டம்ளர் அளவு கம்பை எடுத்து கல், தூசி, மண் போன்றவற்றை நீக்கி சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு கம்பை ஒரு பவுளில் சேர்த்து அதனுடன் இரண்டு மூன்று முறை தண்ணீர் ஊற்றி நன்கு அலசி கொள்ளுங்கள். பின்பு நாம் அலசி சுத்தப்படுத்திய கம்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் இல்லாமல் திருதிருவன அரைத்துக் கொள்ளுங்கள்.
  • பின் அரைத்த கம்பை ஒரு பவுலில் சேர்த்து அதனுடன் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரங்கள் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின்பு ஊற வைத்த கம்பை தண்ணீரில்லாமல் வடிகட்டி தண்ணீரை தனியாக வைத்து கொள்ளுங்கள்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நம் வடிகட்டிய தண்ணீரையும் அதனுடன் நான்கு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும் இதனுடன் கம்பையும் சேர்த்து 20 நிமிடங்கள் கம்பு கட்டியான பதத்திற்கு வரும் முறை கிளறிவிட்டு கம்பை வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின் கடாயை கீழ் இறக்கி வேக வைத்த கம்பை நன்றாக குளிர வைத்துக் கொள்ளுங்கள். கம்பு குளிர்ந்து கட்டியான பதத்திற்கு வந்தவுடன் இதை இப்போது எடுத்து கூலாக கரைக்க வேண்டும் என்றாலும் கரைத்துக் கொள்ளலாம் இல்லை ஒரு நாள் வைத்து அதன்பின் கரைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
  • கட்டியாக மாறிய கம்புடன் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து விடுங்கள் மறுநாள் கம்ப கூழ் ஊற வைத்த தண்ணீரையும் வடிகட்டி விட்டு இதனுடன் ஒரு கப் அளவு தயிரை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பின் தயிர் கலந்த கம்புடன் வடிகட்டிய நீரையும் ஊற்றி, உங்களுக்கு குடிப்பதற்கான தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள்.
  • பின் இதனுடன் 15 சின்ன வெங்காயங்களை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள். பின் உப்பு சரிபார்த்து தேவையென்றால் சேர்த்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான கம்மங்கூழ் தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 300gram | Calories: 243kcal | Carbohydrates: 57g | Protein: 33g | Fat: 1g | Saturated Fat: 1.2g | Sodium: 2mg | Potassium: 576mg | Fiber: 2g | Sugar: 1g
Advertisement
Prem Kumar

Recent Posts

வீடே மணக்க மணக்க ருசியான ஆலு மேத்தி கிரேவி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக்…

2 மணி நேரங்கள் ago

பிரட் இல்லாமலே பிரட் அல்வா செய்யலாம் எப்படி தெரியுமா ? இதோ இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அல்வா என்றாலே அனைவரின் நாவிலும் நீர் சுரக்கத்தான் செய்யும். அப்படி இருக்க  ப்ரட் அல்வாவை அதன் வாசனையிலேயே மனம் நிறைய…

6 மணி நேரங்கள் ago

காலிஃப்ளவர் முட்டை ப்ரை எப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!

எப்பவும் சாதத்துக்கு ஒரே மாதிரியான பொரியல் செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சா அப்போ உங்களுக்கு தான் இந்த காலிஃப்ளவர் முட்டை…

6 மணி நேரங்கள் ago

டேஸ்டியான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபிள் அவல் கட்லெட் 10 நிமிடத்தில் வீட்டிலேயே ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!

நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி…

6 மணி நேரங்கள் ago

தீராத துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து போவதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டிய முறை

ராம நாமத்தை மனதார உச்சரித்து முழுமனதோடு ஆஞ்சநேயரே வேண்டுபவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. ராமருடைய தீவிர பக்தரான ஆஞ்சநேயர் தைரியம்…

7 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா முட்டை குழம்பு வச்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி முட்டை ஆம்லெட் கறி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

இது என்னடா முட்டைக்கறி அப்படின்னு யோசிக்கிறீங்களா? இந்த முட்டை கறி செய்றதுக்கு நம்ம முட்டையை வேக வச்சு சேர்க்காம முட்டையை…

9 மணி நேரங்கள் ago