- Advertisement -
வீட்டில் தோசை மற்றும் இட்லி உணவுகளுக்கு காரமாகவும் சுவையாகவும் ஒரு சட்னி செய்ய விரும்பினால் இந்த கார சட்னியை செய்துபாருங்கள்.
இந்த சட்னியை சிவப்பு மிளகாய் கொண்டு செய்வதால் காரமாகவும், சிவப்பாகவும்,இருக்கும் காரம் அதிகமாக விரும்பி சாப்பிடுபவர்கள் இந்த சட்னியை ஒருமுறையாவதும் ருசித்துப்பார்த்துவிடுகள்.
- Advertisement -
இந்த சட்னி தோசை,இட்லி,சப்பாத்தி,போன்ற காலை மற்றும் இரவு உணவுகளுக்கு பொருத்தமாகவும் சுவையகவும் இருக்கும், குழந்தைகள் இருந்தால் காரத்தை குறைத்து செய்து தரலாம்.
-விளம்பரம்-
குறைவான நேரத்திலும் சுவையாகவும் வீட்டிலேயே சமைத்து விடலாம். எப்படி சமைக்கலாம் என்பதை கீழே கொடுக்கப்பட்டிருக்கு.
நீங்களும் சமைத்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
கார சட்னி
கார சட்னி இட்லி,தோசை போன்ற காலை மற்றும் இரவு உணவுகளுக்கு பொருத்தமாகவும் சுவையாகவும் இருக்கும்.
Calories: 174.14kcal
தேவையான பொருட்கள்
அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:
- 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 4 to 5 சிவப்பு மிளகாய்
- 2 பல் பூண்டு
- புளி சிரியதுண்டு
- கொத்தமல்லி இலை சிறிதளவு
- 2 பெரியவெங்காயம் நறுக்கியது
- 2 தக்காளி நறுக்கியது
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்.
- 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- ¼ கடுகு
- 2 சிவப்பு மிளகாய்
- கருவேப்பிலை சிறிதளவு
செய்முறை
அரைப்பது:
- ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறம் மாறும் வரை வதக்கவும்.
- பின்பு 5 சிவப்பு மிளகாய், 2 நறுக்கிய பெரியவெங்காயம், சேர்த்து வெங்காயம் வேகுறதுக்கு சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பிறகு அதில் பூண்டு,மற்றும் புளி சேர்த்து வெங்காயம் நல்லா வெந்தபிறகு 2 நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- வதங்கிய பிறகு அதில் சிறிதளவு கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து விடவும்.
- சிறிது நேரம் ஆறவிடவும். சூடரானதும் மிக்சியில் சேர்த்து நைசாக அரைக்கவும்.
தாளிப்பது:
- ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து என்னை சூடானதும் ¼ டேபிள் ஸ்பூன் கடுகு, 2 சிவப்பு மிளகாய்,கருவேய்ப்பிலை சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.
- பின்பு தாளித்ததை அரைத்த சட்னியில் சேர்த்து கலந்துவிடவும்.
- இப்பொழுது சுவையான கார சட்னி தயார்.
Nutrition
Calories: 174.14kcal | Fat: 14.55g | Saturated Fat: 1.04g | Sodium: 2.34mg | Potassium: 0.19mg | Sugar: 4.93g | Vitamin A: 85.03IU | Vitamin C: 20.59mg | Calcium: 4.18mg | Iron: 1.5mg