- Advertisement -
உங்கள் வீட்டில் மைதா மாவு இருக்க? அதை வைத்து சூப்பரான ஸ்னாக்ஸ் செய்யலாம். இது போன்று மைதா பிஸ்கட் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. செய்த உடனேயே காலியாகி விடும் அவ்வளவு அட்டகாசமான சுவையில் இந்த பிஸ்கட் இருக்கும்.
-விளம்பரம்-
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
- Advertisement -
மைதா பிஸ்கட் | Maidha Biscuit Recipe In Tamil
உங்கள் வீட்டில் மைதா மாவு இருக்க? அதை வைத்து சூப்பரான ஸ்னாக்ஸ் செய்யலாம். இது போன்று மைதா பிஸ்கட் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. செய்த உடனேயே காலியாகி விடும் அவ்வளவு அட்டகாசமான சுவையில் இந்த பிஸ்கட் இருக்கும்.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- கடாய்
தேவையான பொருட்கள்
- ¼ கிலோ மைதா
- 150 கிராம் சர்க்கரை
- 1 டீஸ்பூன் டால்டா
- எண்ணெய் பொரிப்பதற்கு தேவையானவை
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அனைத்தும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.
- பிசைந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- புன்னர் உருட்டிய உருண்டைகளை ஒவொன்றாக வைத்து சப்பாத்தி கல்லில் வட்ட வடிவத்தில் திரட்டவும். திரட்டிய பின் நமக்கு ஏற்ற வடிவில் வெட்டிக்கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் வடிவமைத்த பிஸ்கட்டுகளை அதில் போட்டு பொரிக்கவும்.
- இப்பொழுது சுவையான மைதா பிஸ்கட் ரெடி…