- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 2
- Cuisine
- Indian
- Course
- evening, snacks
இப்ப இருக்கிற குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே ஃபாஸ்ட் ஃபுட் தான் ரொம்ப விரும்புறாங்க. நூடுல்ஸ், ஃபிரைடு ரைஸ், மேகி இதெல்லாம் விரும்பி சாப்பிட்டாலும் ஸ்னாக்ஸ்க்கு மசாலா பூரி, பானி பூரி, பேல் பூரி, தாகி பூரி அப்படின்னு இந்த மாதிரி ரெசிபிஸ் தான் கடைகளில் போய் வாங்கி சாப்பிடுறாங்க. ஆனா இனிமேல் உங்களுக்கு இந்த மாதிரி ஏதாவது சாட் ஐட்டம்ஸ் சாப்பிடணும் போல தோணுச்சுன்னா மக்கானா வச்சு வீட்டிலேயே ஒரு சூப்பரான மக்கானா பேல் ரெசிபி செஞ்சு பாருங்க.
தாமரை விதைகள் அப்படின்னு சொல்லப்படுற இந்த மக்கானா ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ஒன்னு. இதை சாப்பிடுவதால் உடல் எடை குறையும். இது ஒரு ஹெல்தியான ஸ்நாக்ஸ் கூட. அதனால அடிக்கடி இந்த ரெசிபியை செஞ்சு சாப்பிடலாம். கடையில போய் மசாலா பூரி சாப்பிடறதுக்கு பதிலா வீட்டிலேயே இதை செஞ்சு சாப்பிடுறது உடம்புக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியமானது. டேஸ்டான ருசியான இந்த ரெசிபியை கண்டிப்பா ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க.
குழந்தைகள் ஸ்கூல் விட்டு வரும் போது அவங்களுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் ஆக இந்த ரெசிபியை செஞ்சு கொடுக்கலாம். இந்த மக்கானா வச்சு கேரமலைஸ்டு மக்கானா, மக்கானா ஃப்ரை இந்த மாதிரி நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிடலாம். ஆனா இந்த மாதிரி ஒரு ரெசிபி செய்யும் போது அது எல்லாருமே விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும் இதுல கொத்தமல்லி இலைகள் பெரிய வெங்காயம், தக்காளி எல்லாமே சேர்த்து செய்றதால நல்லா கிரன்ச்சியா சாப்பிடுறதுக்கு ரொம்ப சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான மக்கானா பேல் ரெசிபியை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காலை உணவிற்கு உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு பிரெட் டோஸ்ட் செய்து கொடுங்கள்!!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயில் மக்கானாவை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அரை டீஸ்பூன் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சாட் மசாலா சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு அதில் வறுத்து வைத்துள்ள மக்கானாவை சேர்த்து மூன்று நிமிடம் நன்றாக வறுத்து எடுக்கவும்.
அதனை ஒரு பெரிய பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் நறுக்கிய தக்காளி அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சிறிதளவு உப்பு ஓமப்பொடி மிக்சர் கொத்தமல்லி இலைகள் அனைத்தையும் சேர்த்து கலந்து பரிமாறினால் சுவையான மக்கானா பேல் தயார்.






