- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்கூல் விட்டு வரும்போது ஏதாவது ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க. பெரும்பாலும் வீட்ல உருளைக்கிழங்கு வச்சு ஏதாவது ஸ்னாக்ஸ் செய்வது வழக்கமா இருக்கும். இன்னும் ஒரு சிலர் பஜ்ஜி பிரட் ஆம்லெட் அப்படின்னு குழந்தைகளுக்கு செஞ்சு தருவாங்க ஆனா அந்த மாதிரி இல்லாம கொஞ்சம் ஆரோக்கியமாக வைத்து ஒரு சூப்பரான சாட் இந்த மாதிரி செஞ்சு கொடுத்து பாருங்க. குழந்தைகள் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க அவங்களுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும். மக்கானா வச்சு நிறைய ஆரோக்கியமான ரெசிப்பீஸ் செய்ய முடியும்.
மக்கானா வைத்து சூப்பரான கேரமலைஸ்டு மக்கானா செய்யலாம். மக்கானாவை அப்படியே வறுத்து சாப்பிட்டாலும் சூப்பரா இருக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான மக்கானா சாட் ரெசிபி பட்டர் வச்சு செய்ய போறோம். இதுகூட வேர்க்கடலையும் சேர்த்து செய்ய போறதால சுவை ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும் ஒரு தடவ செஞ்சு பாத்துட்டீங்களா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க குழந்தைகளும் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. மிஸ் பண்ணாம இந்த ரெசிபியை கண்டிப்பா வீட்டுல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க.
இந்த டேஸ்டான ரெசிபியை செஞ்சு கொடுத்தா குழந்தைகள் மட்டும் இல்லாமல் வீட்டில் இருக்கிற பெரியவங்களுமே விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு எப்பவுமே எண்ணெயில் பொரித்த உணவுகள் கொடுப்பதை விட இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா பட்டர் வச்சு செஞ்சு கொடுத்து பாருங்க. இதுக்கு உப்பு இல்லாத பட்டர் தான் பயன்படுத்தணும். அப்படி உப்பு சேர்த்துள்ள பட்டர் சேர்த்துக்கிட்டா இந்த ரெசிபிக்கு உப்பு சேர்க்க தேவையில்லை. இந்த டேஸ்டான ருசியான ரெசிபியை மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சு பார்த்துருங்க. இப்ப வாங்க இந்த சுவையான மக்கானா சாட் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : தாமரை விதை கிரேவி இப்படி செய்து பாருங்க! இந்த கிரேவியின் ருசியே தனி தான்!
Ingredients
Method
ஒரு கடாயில் பட்டர் சேர்த்து ஒரு டீஸ்பூன் சாட் மசாலா, மிளகாய் தூள் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பிறகு மக்கானா வேர்கடலை சேர்த்து நன்றாக வறுத்து ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.
அதனுடன் ஒரு டீஸ்பூன் சாட் மசாலா, நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி கொத்தமல்லி இலைகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்தால் சுவையான மக்கானா சாட் தயார்.






