- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- chutney, Side Dish
ஏப்ரல் மே ஜூன் இந்த மாதங்கள் வந்தாலே அது மாங்காய் மாதங்கள் அப்படின்னு சொல்லலாம். அப்பதான் மாங்காய் சீசன் பயங்கரமா இருக்கும் அந்த சமயத்துல மாங்காய் வச்சு என்னென்ன ரெசிப்பீஸ் செய்ய முடியுமோ எல்லாத்தையும் செஞ்சு ஒரு சிலர் ஒரு வருஷத்துக்கு ஸ்டோர் பண்ணி வச்சிக்குவாங்க. அந்த வகையில மாங்காய் ஊறுகாய், மாங்காய் வத்தல், வடு மாங்காய் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். பெரும்பாலும் மாங்காய் ஊறுகாய் செய்து அதை ஆறு மாசத்துக்கு ஸ்டோர் பண்ணி வச்சுப்பாங்க. மாங்காய் ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் உப்பு மிளகாய் தூள் வைத்து சாப்பிடுவதற்கு ரொம்ப விரும்புவாங்க.
அந்த வகையில் மாங்காயை வைத்து செய்யக்கூடிய ஒரு சூப்பரான சட்னி ரெசிபி இன்னைக்கு பாக்கலாம். காரசாரமா புளிப்பா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். நீங்க எல்லாரும் தேங்காய் சட்னி தக்காளி சட்னி, புதினா சட்னி, மல்லி சட்னி அப்படின்னு நிறைய ரெசிபீஸ் செஞ்சிருப்பீங்க. ஆனா இந்த மாதிரி மாங்காய் சட்னி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி பூரி எல்லாத்துக்கும் சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம் சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். மேலும் பழைய சாதத்துக்கு சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும்.
இந்த கோடை காலத்தில் எல்லாருமே பழைய சாதத்தை ரொம்ப ரொம்ப விரும்புவாங்க. அந்த வகையில இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்பவே சூப்பராக இருக்கும். இது கூட கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் தக்காளி பூண்டு இதெல்லாம் சேர்த்து செய்வதால் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்க அப்படின்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இந்த மாங்காய் சட்னி செய்யும் போது ரொம்ப நைசா அரைக்க கூடாது கொஞ்சம் கொரகொரப்பா அரைக்கணும் அப்பதான் டேஸ்டா இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான மாங்காய் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை மாங்காய் வாங்கினால் அவசியம் ருசியான மாங்காய் மசியல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து மாங்காய் தக்காளி இரண்டையும் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
பூண்டு பற்கள் சேர்த்து கடாயை மூடி பத்து நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.
மாங்காய் மற்றும் தக்காளியின் தோல் உரித்து அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் சீரகத்தூள் மிளகாய்த்தூள் சாட் மசாலா சிறிதளவு சர்க்கரை உப்பு கொத்தமல்லி இலைகள் கருவேப்பிலை பெரிய வெங்காயம் அனைத்தும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
அதில் சூடான எண்ணெயை ஊற்றி பரிமாறினால் சுவையான மாங்காய் சட்னி தயார்.






