Advertisement
சைவம்

சுவையான மங்களூர் இஞ்சி சட்னி செய்வது எப்படி ?

Advertisement

இன்று நாம் காலை அல்லது இரவு உணவாக நான் செய்யும் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற டிபன் வகை உணவுகளுக்கு உடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற மங்களூர் இஞ்சி சட்னி பற்றி தான் பார்க்க போகிறோம். பொதுவாக நாம் வீடுகளில் இட்லி தோசை செய்யும் பொழுது அதனுடன் வைத்து சாப்பிட அதிகபட்சமாக நாம் செய்யும் சட்னியை தேங்காய் சட்னி தக்காளி சட்னி தான். இந்த இரு சட்னிகளை மட்டுமே ஒரு சுழற்சி முறையில் மாற்றி மாற்றி வைத்து சாப்பிடுவோம்.

இதையும் படியுங்கள் : இட்லி தோசைக்கு ஏற்ற எலுமிச்சை பழ சட்னி செய்வது எப்படி ?

Advertisement

ஆனால் உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி செய்ய விருப்பப்பட்டால். அப்போது நீங்கள் கண்டிப்பாக இந்த மங்களூர் இஞ்சி சட்னியை செய்து பாருங்கள். இது போன்ற நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த மங்களூர் இஞ்சி சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

மங்களூர் இஞ்சி சட்னி | Mangalore Ginger Chutney Recipe in Tamil

Print Recipe
உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி செய்ய விருப்பப்பட்டால். அப்போது நீங்கள் கண்டிப்பாக இந்த மங்களூர் இஞ்சி சட்னியை செய்து பாருங்கள். இது போன்ற நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த மங்களூர் இஞ்சி சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course Breakfast, dinner
Cuisine Indian, mangalaur
Keyword GINGER CHUTNEY, இஞ்சி சட்னி
Prep Time
Advertisement
20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 5 People
Calories 165

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

சட்னி வதக்கி அரைக்க

  • 2 tbsp எண்ணெய்
  • 2 tbsp கருப்பு உளுந்து
  • 1 tbsp மல்லி
  • 1 tbsp சீரகம்
  • 1 கைப்பிடி இஞ்சி பொடியாக நறுக்கியது
  • 5 பல் பூண்டு
  • ¼ tsp வெந்தயம்
  • 10 வர மிளகாய்
  • 1 tsp வெல்லம்
  • 1  tbsp புளி கரைசல்
  • உப்பு தேவையான அளவு

சட்னி தாளிக்க

  • 1 tbsp எண்ணெய்
  • 1 tsp கடுகு உளுந்த பருப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 வர மிளகாய்

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் இரண்டு
    Advertisement
    டேபிள் ஸ்பூன் கருப்பு உளுந்து, ஒரு டேபிள் ஸ்பூன் மல்லி, ஒரு டீஸ்பூன் சீரகம் போன்ற பொருட்களை சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள்.
  • பின் இதனுடன் ஒரு கைப்பிடி பொடியாக நறுக்கிய இஞ்சி, ஐந்து பல் பூண்டு, கால் டீஸ்பூன் வெந்தயம் போன்ற பொருட்களை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். பின் இஞ்சி நன்றாக வெந்ததும்.
  • இதனுடன் 10 வர மிளகாய் சேர்த்து வரமிளகாய் சிவக்கும் வரை நன்றாக வறுத்து எடுத்துக். பின் கடாயை கீழ் இறக்கி நன்கு குளிர வைத்துக் கொள்ளுங்கள். பின் குளிர வைத்த பொருள்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து.
  • பின் இதனுடன் ஒரு டீஸ்பூன் வெல்லம், ஒரு டேபிள் ஸ்பூன் புளி கரைசல், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதாக தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். பின் கடாயை மறுபடியும் அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி.
  • அதில் கடுகு உளுந்தம் பருப்பு, ஒரு கொத்து கருவேப்பிலை, இரண்டு வரமிளகாய் சேர்த்து தாளித்து. நாம் அரைத்த இஞ்சி சட்னியை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறி விட்டு இறக்கி கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான மங்களூர் இஞ்சி சட்னி தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 400gram | Calories: 165kcal | Carbohydrates: 9g | Protein: 11g | Fat: 1g | Saturated Fat: 0.2g | Cholesterol: 7mg | Sodium: 3mg | Potassium: 275mg | Fiber: 0.5g | Sugar: 1g | Vitamin A: 6IU | Vitamin C: 2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

பணம் கொட்ட வீட்டு வாசலில் அதிகாலை தூவ வேண்டியவை

இந்துமத நம்பிக்கையின்படி நம் வீட்டில் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய…

2 மணி நேரங்கள் ago

ஒரு சட்டி சோறும் காலியாகும் காரைக்குடி செட்டிநாடு சுரக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க!

பொதுவாக நாம் வீடுகளில் வைக்கும் குழம்புகள், கிரேவிகள், மற்றும் பொரியல் என அனைத்தையும் மணமாகவும் ருசியாகவும் வைத்து சாப்பிட்டாலும். அதை…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 29 ஏப்ரல் 2024!

மேஷம் உங்களின் பணிவான நடத்தை இன்று பாராட்டப்படும். உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.…

5 மணி நேரங்கள் ago

சாக்லேட் குல்ஃபி வீட்லயே செஞ்சு ஜாலியா சாப்பிடுங்க!

ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…

15 மணி நேரங்கள் ago

ஈரல் மிளகு வறுவல், வீட்டில் இப்படி சமைத்து பாருங்கள், இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக…

16 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பாசிப்பருப்பு பிரதமன் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன்…

17 மணி நேரங்கள் ago