Advertisement
சைவம்

ஆந்திரா ஸ்டைல் பாகற்காய் வறுவல் செய்வது எப்படி ?

Advertisement

இன்று நாம் மதிய உணவுக்கு உடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் ஆந்திரா ஸ்டைல் பாகற்காய் வறுவல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நீங்கள் இது போல் ஒரு முறை இந்த ஆந்திரா ஸ்டைலில் பாகற்காய் வறுவலை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். யாருமே வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்க மாட்டார்கள்

இதையும் படியுங்கள் : சுவையான செட்டிநாடு பாகற்காய் கார குழம்பு செய்வது எப்படி ?

Advertisement
Advertisement

அந்த அளவிற்கு இந்த பாகற்காய் வறுவல் அட்டகாசமான சூவையில் இருக்கும். உங்கள் வீட்டில் பாகற்காயை வெறுத்து ஒதுக்குபவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்த ரெசிபியாக இது மாதிரி போகும். அதனால் இன்று இந்த ஆந்திரா பாகற்காய் வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

ஆந்திரா பாகற்காய் வறுவல் | Andhra Pakarkkai Varuval Recipe in Tamil

Print Recipe
நீங்கள் இது போல் ஒரு முறை இந்த ஆந்திரா ஸ்டைலில் பாகற்காய் வறுவலை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். யாருமே வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு இந்த பாகற்காய் வறுவல் அட்டகாசமான சூவையில் இருக்கும். உங்கள் வீட்டில் பாகற்காயை வெறுத்து ஒதுக்குபவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்த ரெசிபியாக இது மாதிரி போகும்.
Course Varuval
Cuisine andhra, Indian
Keyword Pakarkai, பாகற்காய்
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 5 People
Calories 82

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Ingredients

பூண்டு பேஸ்ட் அரைக்க

  • 10 பல் பூண்டு
  • 1 tsp சீரகம்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • ½ tsp உப்பு

பாகற்காய் வறுவல் செய்ய

  • 2 tbsp எண்ணெய்
  • 1 tsp கடலை பருப்பு
  • 1 tsp உளுந்த பருப்பு
  • ½ tsp சீரகம்
  • 2 வர மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • ½ KG பாகற்காய் பொடியாக நறுக்கியது
  • அரைத்த பேஸ்ட்
  • உப்பு தேவையான அளவு
  • 1 tsp எலுமிச்சை சாறு

Instructions

  • முதலில் நாம் எடுத்துக் கொண்ட பாகற்காயை நன்கு தண்ணீரில் சுத்தப்படுத்தி கொண்டு பின் பொடி பொடி துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். பின் ஒரு மிக்ஸி ஜாரில் 10 பல் பூண்டு, ஒரு
    Advertisement
    டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன் உளுந்தம் பருப்பு, அரை டீஸ்பூன் சீரகம் இரண்டு வர மிளகாய் சேர்த்து நன்கு வறுத்த கொள்ளுங்கள்.
  • பின்பு இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன் நாம் பொடியாக நறுக்கிய பாகற்காயை சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
  • பின் பாகற்காய் நன்கு வதங்கி வெந்து வந்ததும் நாம் மிக்ஸியில் அரைத்த பேஸ்ட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு கடாயை மூடி வைத்து ஒரு ஐந்து நிமிடங்கள் வேக வையுங்கள்.
  • பின் ஐந்து நிமிடம் கழித்து சிறிது கருவேப்பிலை இலைகளை தூவி, ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி கடாயை இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான ஆந்திரா ஸ்டைல் பாகற்காய் வறுவல் இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 600gram | Calories: 82kcal | Carbohydrates: 21g | Protein: 9g | Fat: 1g | Saturated Fat: 0.1g | Cholesterol: 0.8mg | Sodium: 2mg | Potassium: 94mg | Fiber: 1g | Sugar: 0.2g | Calcium: 1mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 15 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…

2 மணி நேரங்கள் ago

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

11 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

11 மணி நேரங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

12 மணி நேரங்கள் ago

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

14 மணி நேரங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

15 மணி நேரங்கள் ago