- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast
தமிழர்களின் ஒரு பாரம்பரிய காலை உணவு வகைதான் இந்த இடியாப்பம். தமிழத்தில் உள்ள மிக பிரபலமான காலை உணவுகளுள் இடியாப்பமும் ஒன்று. இவை முழுக்க முழுக்க ஆவியில் வேக வைக்கப்படுவதால் வயதானவர்களும் குழந்தைகளும் விரும்பி உண்பவர். மேலும் இவை எளிதில் செரிமானமானமும் ஆகின்றன. ஆவியில் நன்கு வேக வைக்கப்பட்ட இடியாப்பத்தில் சிறிதளவு தேங்காய் துருவல் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் உங்கள் காலை உணவு திருப்திகரமாக அமையும். இந்த அற்புதமான மற்றும் அனைவருக்கும் ஏற்ற காலை உணவாக உள்ள இடியாப்பத்தை வித்தியாசமான சுவையில் மாம்பழம் செய்வதற்கான எளிய செய்முறையை பார்க்கலாம்.
இது எளிய அதேசமயம் ஆரோக்கியமான காலை உணவு. நீங்கள் காலை உணவாக மாதம் முழுவதும் இட்லி, தோசை மற்றும் சாதம் போன்ற உணவு வகைகளை சமைப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் காலையில் இடியாப்பம், ஆப்பம் போன்ற உணவுகளை தயார் செய்து சாப்பிடலாம். ஆவியில் அவிக்க வைத்து செய்யப்படும் உணவுகள் உடல் நலனுக்கு என்றுமே ஆரோக்கியமானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. அந்த வகையில் 10 நிமிடத்தில் மாம்பழ இடியாப்பத்தை வீட்டிலேயே செய்யும் முறை குறித்து இந்த பதிவில் காணலாம்.
இதனையும் படியுங்கள் : இடியாப்பம் மீதம் ஆயிடுச்சுனா சூப்பரான முட்டை இடியாப்பம் செஞ்சு பாருங்க!
Ingredients
Method
முதலில் மாம்பழத்தை தோல் சீவி மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பவுளில் பச்சரிசி மாவு, உப்பு, ஏலக்காய் தூள், சர்க்கரை, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் அரைத்து வைத்துள்ள மாம்பழ விழுது மற்றும் சுடு தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
பின் பிசைந்து வைத்திருக்கும் இடியாப்ப மாவை சிறிதளவு எடுத்து இடியாப்ப உலக்கில் வைத்து இட்லி தட்டில் பிழிந்து, இட்லி பாத்திரத்தில் மூடி வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து கொள்ளவும்.
இடியாப்பம் வெந்ததும் அதை ஒரு தட்டில் வைத்து அதன்மேல் துருவிய தேங்காய், வெல்லம் சேர்த்து பரிமாறவும். அவ்வளவுதான் மாம்பழ இடியாப்பம் தயார்.






