- Prep
- 5 min
- Cook
- 20 min
- Serves
- 4
- Cuisine
- north india
- Course
- deserts
மேங்கோ பிர்னி அப்படின்னா என்ன அப்படின்னு எல்லாரும் யோசிச்சிட்டு இருப்பீங்க. மாம்பழம் வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான ரெசிபி தான் பார்க்க போறோம்.இந்த ரெசிபி செய்றது ரொம்பவே ஈஸி தான்.ரொம்ப டேஸ்டான இந்த ரெசிபியை விருந்தாளிகள் வந்தா செஞ்சு கொடுங்க கண்டிப்பா சாப்பிட்டுட்டு உங்கள பாராட்டிட்டு போவாங்க.அதோட இது எப்படி செஞ்சீங்க அப்படின்னு உங்ககிட்ட ரெசிபி கேட்டுட்டு போவாங்க.
அந்த அளவுக்கு ஒரு சூப்பரான ரெசிபி தான் இது.இந்த மாம்பழ சீசன்லயே இந்த கம்மியான மாம்பழ பிர்னி செஞ்சு ரசிச்சு சாப்பிடுங்க. ரொம்ப குறைவான பொருட்கள் வச்சு செய்யக்கூடிய இந்த மாம்பழ பிர்னி எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். குழந்தைகளுக்கு கண்டிப்பா ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதனால உங்க வீட்ல இருக்கிற குழந்தைகளுக்கும் பெரியவங்களுக்கும் எல்லாருக்குமே இதை செஞ்சு கொடுத்து அசத்துங்க.
எப்பவும் ஒரே மாதிரியா செய்யாம கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது ரெசிப்பிஸ் செஞ்சு கொடுத்தா எல்லாருமே ரசித்து சாப்பிடுவாங்க. எப்பவும் நம்ம வீட்ல வர்ற விசேஷங்களுக்கு ஒரே மாதிரியான ஸ்வீட் ரெசிபி செய்யாம இந்த ஸ்வீட் ரெசிபி செஞ்சு அசத்துங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான ஸ்வீட் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : இந்த மாம்பழ சீசன்ல வீட்டிலயே சூப்பரான ஃப்ரூட்டி செஞ்சு குடிச்சு பாருங்க! ஒவ்வொரு துளியும் அருமையாக இருக்கும்!
Ingredients
Method
முதலில் பாஸ்மதி அரிசியை ஊறவைத்து அதனை காய வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு கொர கொரப்பாகரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்
அதனை பாலில் சேர்த்து நன்றாக கலந்து ஒரு அடி கனமான பாத்திரத்திற்கு மாற்றி அடுப்பில் வைத்து கிளறிக்கொண்டே இருக்கவும்
பிறகு மாம்பழத்தை துண்டுகளாக வெட்டி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பால் ரவை கலவையில் இந்த மாம்பழ விழுதை சேர்த்து நன்றாக கலந்து விடவும் பிறகு அதில் ஏலக்காய்தூள் நறுக்கிய பாதாம் சேர்த்து கிளறவும்.
நாட்டுச் சர்க்கரையையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதித்த பிறகு இறக்கினால் சுவையான மாம்பழபிர்னி தயார்.






