Advertisement
சைவம்

மணமணக்கும் மரவள்ளி கிழங்கு தோசை செய்வது எப்படி ?

Advertisement

இன்று நாம் காலை அல்லது இரவு உணவாக சாப்பிடக் கூடிய வகையில் ஒரு அட்டகாசமான தோசை ரெசிப்பி பற்றி தான் பார்க்கப் போகிறோம். ஆம் இன்று மரவள்ளி கிழங்கு தோசை பற்றி தான் பார்க்கப் போகிறோம் மரவள்ளி கிழங்குகள் அதிகமாக விளையும் சீசன்களில் விலை குறைவாக கிடைக்கும் பொழுது இதுபோன்று இந்த மரவள்ளி கிழங்கு தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால்

இதையும் படியுங்கள் : புதுவிதமான இந்த காய்கறி அடை தோசை செய்வது எப்படி ?

Advertisement

அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் ஒன்று சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் மொறுமொறுப்பு தன்மையுடன் இருக்கும். அதனால் இன்று இந்த மரவள்ளி கிழங்கு தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

மரவள்ளிக்கிழங்கு தோசை | Maravalli Kilangu Dosai Recipe in Tamil

Print Recipe
இன்று மரவள்ளி கிழங்கு தோசை பற்றி தான் பார்க்கப் போகிறோம் மரவள்ளி கிழங்குகள் அதிகமாக விளையும் சீசன்களில் விலை குறைவாக கிடைக்கும் பொழுது இதுபோன்று இந்த மரவள்ளி கிழங்கு தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் ஒன்று சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் மொறுமொறுப்பு தன்மையுடன் இருக்கும்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Dosai, தோசை
Prep Time 20 minutes
Advertisement
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 people
Calories 105

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 தோசை கல்

Ingredients

  • ¼ KG மரவள்ளிக்கிழங்கு
  • ½ கப் அரிசி
  • 5 வர மிளகாய்
  • 1 tbsp சோம்பு
  • 7 பல் பூண்டு
  • ¾ tbsp உப்பு
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • ¼ tbsp பெருங்காய தூள்
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி பொடியாக நறுக்கியது

Instructions

  • முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவில் அரிசி எடுத்து இரண்டு முறை நன்கு அலசி கொண்டு. பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு தேவையான அளவு மரவள்ளி கிழங்குகளை எடுத்துக்கொண்டு அதன்
    Advertisement
    மேற்புற தோலை சீவி எடுத்துக் கொள்ளுங்கள். பின் மரவள்ளி கிழங்கை நறுக்காமல் துருவி எடுத்து கொள்ளுங்கள்.
  • பின் ஒரு மிக்ஸி ஜாரில் வர மிளகாய், சோம்பு, பூண்டு பற்கள் மற்றும் உப்பு போன்ற பொருட்களை சேர்த்து கொரகொரவென அரைத்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் நாம் ஊறவைத்த அரசியையும் தண்ணீர் இல்லாமல் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
  • பின் கடைசியாக இதனுடன் நான் துருவி வைத்திருக்கும் மரவள்ளி கிழங்கையும் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள் பின் நாம் அரைத்து வைத்திருக்கும் கிழங்கை ஒரு பெரிய பவுளில் சேர்த்து கொள்ளவும்.
  • பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தூள் போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
  • பின் மாவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கல் சூடாக ஏதும் இரண்டு கரண்டி மாவு எடுத்து கல்லில் ஊற்றவும்.
  • பின் தோசை இரண்டு புறமும் வெந்ததும் எடுத்துக் கொள்ளுங்கள் இவ்வாறு மீதம் இருக்கும் மாவையும் ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான மரவள்ளிக்கிழங்கு தோசை தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 400gram | Calories: 105kcal | Carbohydrates: 45g | Protein: 13g | Fat: 1g | Saturated Fat: 1.1g | Sodium: 3mg | Potassium: 382mg | Fiber: 2g | Sugar: 1g
Advertisement
Prem Kumar

Recent Posts

முட்டை போண்டா இப்படி செஞ்சி குடுங்க நிமிசத்துல எல்லாமே காலி ஆகிவிடும்

என்னதான் வாழைக்காய் பஜ்ஜி வெங்காய பஜ்ஜி வெங்காய போண்டா உளுந்து வடை பருப்பு வடை மசால் போண்டா சாப்பிட்டாலும் முட்டை…

20 நிமிடங்கள் ago

சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…

3 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2024 எப்போது? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

4 மணி நேரங்கள் ago

வாயில வச்ச உடனே கரைந்து போற ரொம்பவே ஆரோக்கியமான தேன் ஐஸ்கிரீம் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

சாக்லேட் ஐஸ்கிரீம் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் பலாப்பழ ஐஸ்கிரீம்ல எக்கு சக்கமான ஐஸ்கிரீம் நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனா…

5 மணி நேரங்கள் ago

மதிய உணவுக்கு சுட சுட சர்க்கரை வள்ளி கிழங்கு சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி!

கிழங்கில் உருளைக்கிழங்கு, மரவல்லிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பல வகையான கிழங்கு .ஒவ்வொரு வகையும்…

6 மணி நேரங்கள் ago

பணம் கொட்ட வீட்டு வாசலில் அதிகாலை தூவ வேண்டியவை

இந்துமத நம்பிக்கையின்படி நம் வீட்டில் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய…

8 மணி நேரங்கள் ago