- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு. இவை இந்தியாவில் மிகப் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. இவை தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கட்லெட்டுகளில் பல வகை உண்டு. அதில் சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், ஃபிஷ் கட்லெட், வெஜிடபிள் கட்லெட், பன்னீர் கட்லெட் மற்றும் மஸ்ரூம் கட்லெட் பிரபலமானவை. காய்கறிகள், கீரைகள் , பருப்பு வகைகள் ஆகியவற்றை உண்ணாத குழந்தைகளுக்கு அனைத்தும் சேர்த்து இவ்வாறு கட்லெட்களாக செய்து கொடுக்கலாம்.
காய்கறிகள் வேண்டாம் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளும் கூட இதை விரும்பி உண்பார்கள். இவை செய்வதற்கும் எளிமையானவையும் கூட. இவை அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப வேறு வேறு காய்கறிகள், கீரைகள் சேர்த்து செய்கிறார்கள். வெவ்வேறு காய்கறிகள் சேர்த்தாலும் உருளைக்கிழங்குக்கு மாற்று கிடையாது. அந்த வகையில் நாம் இன்று மைசூர் பருப்பு சேர்த்து கட்லெட் எப்படி செய்வதென்று பார்ப்போம். துவரம் பருப்பு, பாசிப்பயறு மற்றும் மற்ற பயறு வகைகளைப் பயன்படுத்தும் அளவுக்கு நாம் தமிழ்நாட்டில் மசூர் பருப்பு அதிகமாகப் பயன்படுத்தப்படுவது இல்லை.
ஆனால் வட இந்திய மாநிலங்களில் இந்த பருப்பு பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. அதிக புரதச்சத்துக்கள் கொண்ட இந்த பருப்பு உடல் எடையைக் குறைப்பதிலும் நமக்கு உதவி செய்கிறது. மற்ற பருப்புகளுடன் ஒப்பிடுகையில் இதில் கார்போஹைட்ரேட் அளவு குறைவாகவே உள்ளது. உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க விரும்புவர்கள் வாரத்திற்கு மூன்று முறை உணவில் மசூர் பருப்பை சேர்த்து கொள்ளலாம்.
அந்த வகையில் மாலை நேரங்களில் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு 15 நிமிடங்களில் ஆரோக்கியமாக ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் தாய்மார்கள் இந்த மைசூர் பருப்பு கட்லெட் செய்து கொடுக்கலாம் மிகவும் சுவையாக இருக்கும். உங்கள் வீட்டிற்கு திடீரென விருந்தாளிகள் வந்தால் கவலை வேண்டாம், சிறிது நேரத்திற்குள்ளேயே இந்த ஸ்னாக்கை செய்து நீங்கள் அசத்தலாம். டீ, காபி குடிக்கும் சமயத்தில் இந்த மைசூர் பருப்பு கட்லெட் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். வாருங்கள் சுவையான மைசூர் பருப்பு கட்லெட் ஆரோக்கியமான முறையில் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ருசியான மைசூர் மசாலா தோசை இப்படி செய்து பாருங்க இதன் ருசியே தனி!
Ingredients
Method
முதலில் மைசூர் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். மீல் மேக்கரை சூடு தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த பருப்பு, மீல் மேக்கர், வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு, பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, மல்லி தூள், சீரகத்தூள், எலுமிச்சை சாறு, கஸ்தூரி மேத்தி சேர்த்து அரைத்து கொள்ளவும்.
பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த கலவையில் சிறிதளவு எடுத்து வட்டமாக தட்டி சேர்த்து இரண்டு பக்கமும் வேக விட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மைசூர் பருப்பு கட்லெட் தயார்.






