- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
விடுமுறை நாட்களில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் உங்களிடம் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். மாலையில் குழந்தைகளுக்கு சுவையான மற்றும் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால், மிளகு தட்டை செய்து கொடுங்கள். தமிழ்நாட்டில் பல சுவையான ஸ்நாக்ஸ் பிரபலமாக உள்ளன.
அதில் தனித்துவமானதும், மிகவும் பிரபலமானதும் தட்டை. இந்த சிறப்பு உணவு நம்முடைய மாவட்டத்தில் அதிகம் பிரபலமடைந்தது. இது ஒரு பாரம்பரியமான வீட்டு சமையலிலிருந்து, தெரு உணவாக வளர்ந்து, இன்று பலரின் விருப்பமான ஸ்நாக்காக உள்ளது. இந்த தட்டை ரெசிபியானது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். அதுவும் மாலை பொழுதில் சூடான டீயுடன் இந்த தட்டை சாப்பிடும் போது அவ்வளவு நிறைவாக இருக்கும். ஒரு வாரம் என்ன, ஒரு மாதத்துக்கு கூட வைத்து சாப்பிடும் அளவுக்கு ஆரோக்கியம் நிறைந்த இந்த மிளகு தட்டை செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மாலை வேளையில் சுட சுட சாப்பிட சுவையான ரோஸ்டடு மசாலா பன்னீர் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
Ingredients
Method
முதலில் மிக்ஸியில் வேர்க்கடலை மற்றும் மிளகை தனித்தனியாக சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரிசி மாவை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் உப்பு, வேர்க்கடலை, சீரகம், மிளகு, வெள்ளை எள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு கலந்து, சிறிதளவு தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
பின் இதனை உருண்டையாக உருட்டி, பூரி போல் தேய்த்து எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மிளகு தட்டை தயார்.






