சீறுநீரகத்தை பாதிக்கும் இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள் ?

- Advertisement -

நம் உடம்பில் உள்ள சில உடல் உறுப்புகள் நம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான உறுப்புகளாக இருக்கும் அதில் நமது சிறுநீரகமும் ஒன்றுதான். நமது உடம்பில் உள்ள சிறுநீரகம் செயல்படுவதை நிறுத்திவிட்டால் நம் உயிர் இழப்பது நிச்சயம். நம் உடம்பில் உள்ள சிறுநீரகம் நமது ரத்தத்தை சுத்திகரித்து அதில் உள்ள கழிவு பொருட்களை உடலில் இருந்து வெளியேற்றுகிறது. மேலும் நம் உடம்பில் உபரியாகவும், தேவையற்ற பொருளாகவும் தங்கியிருக்கும் அமில பொருட்கள் போன்றவற்றையம் அதுமட்டுமில்லாமல் நம் உடம்பில் உள்ள நச்சுக்களையும் தேவையற்ற உப்புக்களையும் சிறுநீரகம் வெளியேற்றும் ஒரு மகத்துவமான வேலையை அது செய்கிறது. ஆகையால் நம் உடம்பில் உள்ள சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டியது நமது கடமை ஆகும்.!நாம் நமக்கு தெரியாமலேயே சிறுநீரகத்தை பாதிக்கு கூடிய அளவில் செய்யும் சில தவறுகளை இந்த உடல் நலம் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : சீறுநீரக் கல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா ?

- Advertisement -

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

Youtube Sub

தண்ணீர்

நாம் ஒரு நாளைக்கு நமது உடலுக்கு தேவைப்படும் நீரை விட குறைந்த அளவு நீரை நாம் குடிப்பதனால் நாம் உடலில் தண்ணீர் தட்டுபாடு உண்டாகும். இதனால் நமது சீறுநீரகம் பாதிக்கப்பட்டு நமது சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது எனவே ஒரு நாளைக்கு தேவையான அளவு தண்ணீரை முறையாக குடிக்க வேண்டும்.

-விளம்பரம்-

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

நாம் சில உணவு பொருட்களை பாதுகாக்கவும் மற்றும் சுவைக்காகவும் பதப்படுத்த வேண்டிய சூழ்நிலைகள் வரும். ஆனால் சில உணவுகளை வியாபார நோக்கத்திற்காக அதிகளவு நேரம் பதப்படுத்தி வைத்தால். அந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிக அளவில் இருக்கும். ஆகையால் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது அதை நாம் சிறுநீரகத்தை பாதிக்கும் மேலும் சிறுநீரக நோய்களால் அவதிப்படும் நபர்களும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்துக் கொள்வது நல்லது.

புகைப்படித்தல்

புகைப்பிடிப்பதன் மூலமாகவோ நம்மளது சிறுநீரக ஆரோக்கியம் குறைந்து விடும் ஏனென்றால் நாம் தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் கொண்டு இருந்தால் அது உங்கள் ரத்த ஓட்டத்தை குறைத்து சிறுநீரக நாளங்களை சுருக்கி விடும். இதனால் சீறுநீரக ஆரோக்கியத்திற்கு பாதிப்பு உண்டாக்கும். ஆகையால் இனி புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.

மருந்து, மாத்திரகைள்

இருப்பதெல்லாம் நம் உடம்புகளில் காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி மற்றும் வயிற்று வலி போன்ற சாதாரண சிறு சிறு பிரச்சனைகள் வரும் பொழுது மருத்துவரை சந்திக்காமல் மெடிக்கல் ஷாப்பில் உடனடி வலி நிவாரணி மாத்திரைகள் போன்றவற்றை நாம் அதிகமாக உட்கொள்ளுவதால் நமது சிறுநீரகம் பாதிப்புக்கு உள்ளாகும் ஆகையால் மருத்துவரை பரிந்துரைக்காமல் எந்த மருந்து மாத்திரைகள் எதையும் உட்கொள்ளக் கூடாது.

-விளம்பரம்-

உப்பு

மேலும் சிறுநீரகத்தை பாதிக்கும் சோடியம் என்ற பொருள் நாம் உணவில் சேர்க்கும் உப்பில் அதிகமாக இருக்கிறது ஆகையால் நம் உணவில் அதிக அளவு உப்பு சேர்ப்பது ஆபத்தாகும். ஏனென்றால் உப்பில் உள்ள சோடியம் நமது ரத்தத்தில் கலந்து நமக்கு ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இது நமது சிறுநீரகத்தை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் எனவே நம் உணவில் உப்பு அதிகமாக சேர்ப்பதை தவிர்த்துக் கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here