- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
வெங்காய பக்கோடா, சிக்கன் பக்கோடா, பாகற்காய் பக்கோடா அப்படின்னு எக்கச்சக்கமான பக்கோடா ரெசிப்பீஸ் வீட்ல செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. கடையிலும் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்னைக்கு நம்ம பாசிப்பருப்பு வச்சு புதுசா பாசிப்பருப்பு பக்கோடா செய்ய போறோம். இந்த ரெசிபி செய்வதற்கு நமக்கு 100 கிராம் அளவு பாசிப்பருப்பு இருந்தாலே போதுமானது. பாசிப்பருப்பு வச்சு சாம்பார் செஞ்சு இருப்பீங்க. பாசிப்பருப்பு வைத்து சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் எல்லாம் செஞ்சுருப்பீங்க. மேலும் பாசிப்பருப்பு வைத்து பாசிப்பருப்பு பாயாசம் பாசிப்பருப்பு அல்வா அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சிருப்பீங்க. ஆனா இந்த பாசிப்பருப்பு பக்கோடா ரொம்பவே வித்தியாசமா இருக்கும்.
இதுக்கு பெருசா வேற எந்த மாவும் சேர்க்க தேவையில்லை கொஞ்சமா அரிசி மாவு மட்டும் சேர்த்தாலே போதுமானது. அரிசி மாவு இல்ல அப்படின்னா அதுவும் போட இதுக்கு பெரிய வெங்காயத்தை பொடியா நறுக்காமல் நீளமாக நறுக்கி சேர்க்க வேண்டும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா வீட்ல செஞ்சு பாருங்க குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் செஞ்சு கொடுங்க மாலை நேரத்தில் டீ, காபியோட இந்த ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இப்ப வாங்க பாசிப்பருப்பு வைத்து இந்த வித்தியாசமான பக்கோடா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பாசிப்பருப்பு பணியாரம் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! அடிக்கடி செய்து தர சொல்லுவாங்க!
Ingredients
Method
பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் உப்பு சீரகம் பெரிய வெங்காயம், கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் அரிசி மாவு அனைத்தும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பொரித்து எடுத்தால் சுவையான பாசிப்பருப்பு பக்கோடா தயார்.






