இப்போது சில ஆண்டுகளாக கொரோனாவின் காரணமாக பலர் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்து கொண்டார்கள். இன்றைய நவீன காலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்த நவீன பல பேர் அப்பொழுது சற்று நின்னு நாம் உடல் ஆரோக்கியத்தின் மீதும் கவலைப்பட ஆரம்பித்து விட்டோம். தற்போது சில ஆண்டுகளாக பலர் அவர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக எல்லா முயற்சியும் செய்து வருகின்றனர். உதாரணமாக பவர் முழு இயற்க உணவு பொருட்களை தேர்வு செய்து சாப்பிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : காலையில் வெறும் வயற்றில் சாப்பிட கூடாத உணவுகள் பற்றி தெரியுமா ?
என்றாலும் எதை எதை எப்போது முறையாக சாப்பிட வேண்டும் என்ற சிந்தனை யாருக்கும் இருக்காது. சில பொருட்களை தவறான சமயத்தில் உட்கொண்டால் நம் உடலுக்கு பல உவாமைகள் வரும். உடல் ஆரோக்கியமாக இருப்பதற்காக காலையில் வெறும் வயிற்றில் நாம் சில பொருட்களை எடுத்து சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். அப்படி காலையில் உடல் ஆரோக்கியத்திற்காக சில பானங்கள் நாமே வீட்டில் தயார் செய்து குடிக்கலாம் என்னென்ன பானங்கள் தயார் செய்யலாம், தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த உடல் நலம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.
அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

அவகோடா பானம்
தேவையான பொருட்கள்
அவகோடா – 1/2 பழம்
கீரின் ஆப்பிலள் – 2
வெள்ளரிக்காய் – 1
1 எலுமிச்சை பழச்சாறு
செய்முறை
கொத்தமல்லியின் இலைகளை ஆய்ந்து விட்டு அதன் பின் ஆப்பிள், வெள்ளரிக்காய் அவகோடா பழங்களை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
பின்பு இதனை மிக்ஸி ஜாரில் போட்டு இதனுடன் ஒரு எலுமிச்சை பழச்சாறு பிழிந்து விட்டுக் கொள்ளுங்கள். பின்பு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து அரைத்த சாறை வடிகட்டி சாறு எடுத்து இதனுடன் ஐஸ் போட்டு குடிப்பவர்கள் ஐஸ் போட்டுக் கொள்ளுங்கள் இல்லை என்றாலும் அப்படியே கூட குடிக்கலாம்.

பழ பானம்
தேவையான பொருட்கள்
பாதாம் பால் – 1 ½ கப்
பாலக்கீரை – 2 கப்
வாழைப்பழம் – 1
அண்ணாச்சி – 1/2 கப்
கொய்யா – 1/2 கப்
செய்முறை
வாழைப்பழத்தை இரவில் தூங்கும்போது ஃபீரிசரில் வைத்து விட்டு தூங்குங்கள் காலையில் வாழைப்பழத்தை எடுத்து துண்டு துண்டாக நறுக்கி பாலக்கீரை அறிந்து கொள்ளுங்கள்.
அன்னாசி பழம் தோல்லைய நீக்கி விட்டு நறுக்கி கொள்ளுங்கள். பின் கொய்யா பழத்தையும் நறுக்கி அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
பின் பானம் தயாராகிவிட்டது நீங்கள் வடிகட்டி சாறு எடுத்து ஐஸ்கட்டி போட்டு கொடுப்பீர்கள் என்றால் ஐஸ் கட்டி போட்டுக் கொள்ளுங்கள் இல்லை என்றால் அப்படியே குடிங்கள்.

கற்றாழை பானம்
தேவையான பொருட்கள்
கற்றாழை ஜெல் – 100 கிராம்
அவகோடா – 1/4 பழம்
பாலக்கீரை – 100கிராம்
வாழைப்பழம் – 1
1 எலுமிச்சை பழச்சாறு
செய்முறை
மிக்ஸி ஜாரில் கற்றாழை ஜெல் போட்டு அதனுடன் அவகோடா மற்றும் வாழைப்பழ பழங்களை துண்டு துண்டாக நறுக்கி கொள்ளவும்.
பாலக்கீரை இலையை ஆய்ந்து போட்டு ஒரு எலுமிச்சை பழச்சாறு பிழிந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.
பின் அனைத்து பொருட்களையும் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள் பெண் வடிகட்டி சாறு எடுத்து ஐஸ் போட்டு குடிப்பீர்கள் என்றால் ஐஸ் போட்டுக் கொள்ளுங்கள் இல்லை என்றாலும் அப்படியே குடிக்கலாம்.