- Prep
- 5 min
- Cook
- 25 min
- Total
- 30 min
- Serves
- 6
- Cuisine
- Indian
- Course
- sweets
எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது விசேஷ நிகழ்வுகளை மேலும் சிறப்பானதாக மாற்றி விடும். அதுவும் உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும் பொருட்களால் தயாரிக்கப்பட்ட இனிப்பாக இருந்தால் தயக்கமே இல்லாமல் ஒரு பிடி பிடித்து விடுவீர்கள். அப்படி சிறந்த நன்மை வாய்ந்த அரிசி, நட்ஸ் மற்றும் நெய் கொண்டு தயாரிக்கப்படும் அருமையான சுவையான இனிப்பு வகை தான் முத்தஞ்சன்.
இந்த முத்தஞ்சன் என்பது முகலாயர் காலத்து அரசவை சமையலில் இருந்து உருவான ஒரு உன்னதமான மற்றும் பழமையான இனிப்பு வகையாகும். இது தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தின் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி போன்ற பகுதிகளில் நடைபெறும் திருமண விருந்துகளில் மிகவும் புகழ்பெற்றது. சீரக சம்பா அரிசியை பால், சர்க்கரை மற்றும் நெய்யுடன் சேர்த்து வேகவைத்து, அதன் மீது ஏலக்காய், மற்றும் நறுமணப் பொருட்கள் சேர்த்து இது தயாரிக்கப்படுகிறது. இந்த சுவையான முத்தஞ்சன் நாக்கில் எச்சில் ஊறக்கூடிய அளவிற்கு மிக அருமையாக இருக்கும். இது அனைத்து பருவங்களுக்கும் மிகவும் பொருத்தமானது.
இந்த ரெசிபி கொஞ்சம் இனிமையானதாக இருப்பினும், ஒரு சத்தான ரெசிபி ஆகும். எப்பொழுதும் டீ, காபி, பால், கூல்ட்ரிங்ஸ், ஜூஸ் என ஒரே மாதிரியாக குடிக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக உடலுக்கு நன்மைகள் தரக்கூடிய இந்த முத்தஞ்சன் செய்து குடிக்கலாம். இந்த சுவையான முத்தஞ்சன் ரெசிபியை வீட்டில் முயற்சி செய்து உங்கள் அன்புக்குரியவர்களை மகிழ்விக்கவும். மேலும் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு முத்தஞ்சன் கொடுத்தால், அவர்களின் பசி அடங்குவதோடு, உடலுக்கு சத்தானதும் கூட. இப்போது சுவையான முத்தஞ்சன் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : தித்திக்கு சுவையில் ஆப்பிள் கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்தாலே நாவில் எச்சி ஊறும்!
Ingredients
Method
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பாதாம் மற்றும் ஏலக்காய் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து அதில் முந்திரி மற்றும் சாரப்பருப்பு சேர்த்து வறுக்கவும். பின் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
பின் பால் நன்கு கொதித்து வந்ததும் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து மூடி வைத்து வேக விடவும். அரிசி முக்கால் பாகம் வெந்ததும் கண்டென்ஸ்டு மில்க், கோவா, சர்க்கரை சேர்த்து கலந்து மூடி வைத்து கொதிக்க விடவும்.
இவை நன்கு கொதித்து வந்ததும் அரைத்து வைத்துள்ள பாதாம் சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான முத்தஞ்சன் தயார்.






