- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, Snack
முட்டை போண்டா தனியாவும் ஆனியன் போண்டா தனியாவும் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க நிறைய பேருக்கு முட்டை போண்டா ஆனியன் போண்டா ரொம்ப ரொம்ப ஃபேவரட்டா இருக்கும். அந்த வகையில் இன்னைக்கு நம்ம ஆனியன் முட்டை இரண்டையும் சேர்த்து வச்சு ஆனியன் முட்டை போண்டா செய்யப் போறோம். இந்த போண்டா ஒன்னு சாப்பிட்டாலே அவ்ளோ சூப்பரா இருக்கும். வயிறுக்கு நிறைவாகவும் இருக்கும். இந்த சுவையான ஆனியன் முட்டை போண்டா ரெசிபி ஒரே ஒரு தடவை மட்டும் வீட்ல செஞ்சு பாருங்க அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். முட்டைய வேக வச்சு ரெண்டா கட் பண்ணி அதுக்கு அப்புறமா இந்த போண்டா செஞ்சு பாருங்க.
இந்த போண்டா சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும் குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். ஈவினிங் டைம்ல சுட சுட டீ, காபி ஓட இந்த ஆனியன் முட்டை போண்டா சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். ருசியான இந்த ஆனியன் முட்டை போண்டா ரெசிபி கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிச்ச மாதிரி இருக்கும். இதுல கடலை மாவு அரிசி மாவு சேர்க்கிறதால நல்ல மொறு மொறுப்பாகவும் சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப ருசியாகவும் இருக்கும். இந்த போண்டாவ சாப்பாட்டுக்கு சைட் டிஷ்ஷாவும் வச்சு சாப்பிடலாம்.
ரொம்ப ரொம்ப டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா ஒரே ஒரு தடவை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. எப்பவுமே ஒரே மாதிரியா பஜ்ஜி வடை அப்படின்னு செய்யாம இந்த மாதிரி கொஞ்சம் டிஃபரண்டா ஆனியன் முட்டை போண்டா செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இதுல கொத்தமல்லி இலைகள் கருவேப்பிலை கரம் மசாலா சேர்ப்பதால் ரொம்ப ரொம்ப வாசனை ஓட மணமாக இருக்கும். தனித்தனியா நீங்க சாப்பிட்டதை விட இது ரொம்ப ரொம்ப சூப்பரா இப்ப வாங்க இந்த சுவையான ஆனியன் முட்டை போண்டா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சூப்பரான உருளைக்கிழங்கு மசாலா போண்டா ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
அதில் கடலை மாவு அரிசி மாவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் கரம் மசாலா மிளகாய் தூள் நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
முட்டையை வேகவைத்து இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கலந்து வைத்துள்ள மாவை கையில் தட்டி அதன் மேல் முட்டை வைத்து மூடி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான ஆனியன் முட்டை போண்டா தயார்.






