Advertisement
சைவம்

பூரி, சப்பாத்திக்கு ஏற்ற ருசியான வெங்காய மசாலா இப்படி செய்து பாருங்க!

Advertisement

சப்பாத்தி, பூரிக்கு எப்பொழுதும் குருமா மற்றும் பூரி மசாலா செஞ்சி சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இனி இந்த மாறி வெங்காயம் மசாலா செஞ்சி சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : சுவையான பாலக்காடு பூரி கிழங்கு மசாலா செய்வது எப்படி ?

Advertisement

வீட்டில் உள்ள எல்லோரும் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. எத்தனை பூரி சாப்பிட்டோம் என்று கணக்கே இல்லாமல் சாப்பிடுவாங்க. இந்த மசாலா எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

வெங்காய மசாலா | Onion Masala Recipe In Tamil

Print Recipe
சப்பாத்தி, பூரிக்கு எப்பொழுதும் குருமா மற்றும் பூரி மசாலா செஞ்சி சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இனி இந்த மாறி வெங்காயம் மசாலா செஞ்சி சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும்.
வீட்டில் உள்ள எல்லோரும் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. எத்தனை பூரி சாப்பிட்டோம் என்று கணக்கே இல்லாமல் சாப்பிடுவாங்க.
இந்த மசாலா எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword onion மசாலா, பூரி மசாலா
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 16 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 7 பெரிய வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • 10 பச்சை மிளகாய் நறுக்கியது
  • உப்பு தேவையான அளவு
  • ½ டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 தக்காளி நறுக்கியது
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • ½ டீஸ்பூன் கறிமசாலா பொடி
  • 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
  • கொத்தமல்லி நறுக்கியது கொஞ்சம்

Instructions

  • முதலில் ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சேர்த்து நன்கு பொரிந்து சிவக்க வேண்டும்.
  • அடுத்து நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வெங்காயம் நன்கு கண்ணாடி பதத்திற்கு வெந்து வர வேண்டும்.
  • வெந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து வேக விடவும்.
  • தக்காளி வதங்கும் சமையத்தில் மஞ்சள் தூள், கறிமசாலா தூள், சேர்த்து நன்கு வதங்க வேண்டும்.
  • நன்கு வதங்கியதும் 2½ கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.
  • வெந்ததும் கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன் எடுத்து 1 கப் அளவிற்கு தண்ணீரில் கரைத்து அதில் ஊற்றி பச்சை வாசனை போக வதக்கவும்.
  • 5 நிமிடம் கொதித்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை நிறுத்தவும்.
Advertisement
swetha

Recent Posts

சாக்லேட் குல்ஃபி வீட்லயே செஞ்சு ஜாலியா சாப்பிடுங்க!

ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…

9 மணி நேரங்கள் ago

ஈரல் மிளகு வறுவல், வீட்டில் இப்படி சமைத்து பாருங்கள், இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக…

10 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பாசிப்பருப்பு பிரதமன் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன்…

11 மணி நேரங்கள் ago

இட்லி ,தோசை சாதம்,சப்பாத்திக்கு அருமையான பாலக் கீரை தால் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த பாலக் கீரையை வாரத்தில் ஒரு நாளாவது நம்முடைய உணர்வோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும்…

12 மணி நேரங்கள் ago

வாஸ்து சாஸ்திரத்தின் படி கற்றாழையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் நல்லது என்று பார்க்கலாம்

கற்றாழை ஒரு சில இடங்களில் கொத்து கொத்தாக நிறைய இருக்கும் ஆனால் கற்றாழையின் பயன்கள் நமக்கு தெரியாததால் அதனை அலட்சியமாக…

16 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் சூப்பரான மலபார் முட்டை பிரியாணி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக முட்டை பிரியாணி என்றால் சொல்லவா…

16 மணி நேரங்கள் ago