காற்று சுத்திகரித்து ஆக்சிஜனை அள்ளித்தரும் வீட்டு அலங்கார செடிகள்!

- Advertisement -

மரங்கள் வளர்ப்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கும்கிறது நமக்கெல்லாம் தெரியும். அதேமாதிரி அதோட இலைகள், காய்கள், பழங்கள் மட்டுமில்லாம பட்டை, வேர்னு எல்லாமே பலன் கொடுக்கக்கூடியதுதான். மரங்கள் மட்டுமில்ல செடிகளும்கூட பலன் தரக்கூடியதுதான். குறிப்பா இன்னைக்கி சூழல்ல காற்று மாசுபாட்டால வரக்கூடிய பிரச்சினைகளை சரிபண்றதுக்கு அழகுச்செடிகள்னு நாம நினைச்சிட்டு இருக்கிற மணி பிளான்ட், சாமந்தி, பீஸ் லில்லி மாதிரி பலவிதமான செடிகள் காற்று தடுப்பானாவும், ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும் பயன்படுது.

-விளம்பரம்-

சாமந்திப்பூ கற்றாழை

பொதுவா தாவரங்கள் எல்லாம் பகல் நேரத்துல ஆக்சிஜனையும், ராத்திரி நேரத்துல கார்பன்டை ஆக்சைடையும் வெளியிடும். ஆனா கத்தாழை, துளசி மாதிரி பல செடிகள் ராத்திரி நேரத்துலயும் ஆக்சிஜனை வெளியிடும். கிராமம், நகரம்னு பாகுபாடு இல்லாம பல வீடுகள்ல மணி பிளான்ட், சாமந்திப்பூ, கற்றாழை, பாம்புக்கற்றாழை, மருள்னு பலவிதமான செடிகள் வளர்க்கிறதை பார்த்திருப்பீங்க. பலபேருக்கு இந்தச்செடிகளை ஏன் வளர்க்கிறோம்னு தெரியாமலே வளர்ப்பாங்க. பல வீடுகள் முன்னாடி வாசலுக்கு மேல கத்தாழையை தொங்கவிட்டிருப்பாங்க. அது ஏன்னு கேட்டா பல பேருக்கு தெரியாது. கத்தாழைக்கு தண்ணி விடலைன்னாலும்கூட அது காற்றுல உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி வாழும்.

- Advertisement -

ஸ்நேக் பிளான்ட்

அதே மாதிரி வீடுகள் உள்ளேயும் சில மூலிகைகளை வளர்ப்பாங்க. சிலபேர் துளசி மாடம் வச்சிருப்பாங்க. இந்தமாதிரி துளசி வளர்க்கிறதாலகூட நமக்கு ஆக்சிஜன் அதிகமா கிடைக்கும். சாமந்திப்பூ செடியும்கூட அப்படித்தான். சில வீடுகள்ல வாசல் முன்னாடி சாமந்திச் செடி வளர்ப்பாங்க இது தூசியை வடிகட்டி சுத்தமான காற்றை நமக்குத்தரும். நேரடியா இந்தச் செடியை வெயில்ல வைக்காம மறைமுகமாக சூரிய ஒளி படுற மாதிரி வச்சா நல்லது. ஸ்நேக் பிளான்ட்னு ஒரு செடி கேள்விப்பட்டிருப்பீங்க. அதை பாம்புக்கற்றாழைன்னும்கூட சொல்வாங்க. இந்தச் செடியை வீட்டுக்கு வெளியேயும் வளர்க்கலாம். உள்ளேயும் வளர்க்கலாம்.

நாசா விண்வெளி மையம்

இந்தச் செடிகளெல்லாம் காற்றை சுத்திகரிக்கக்கூடியதுன்னு நாசா விண்வெளி மையம்கூட அங்கீகரிச்சிருக்கு. இது நைட்ரஜன் ஆக்சைடு, பார்மால்டிஹைடு மாதிரி நச்சு வாயுக்களை உள்வாங்கி நமக்கு சுத்தமான காற்றைக் கொடுக்கும். பீஸ் லில்லின்னு ஒரு தாவரம் இருக்கு. பச்சை பசேல்னு இருக்கும், அதுல வெள்ளை நிறத்துல பூ பூத்திருக்கும். இதுவும் காற்றை சுத்திகரிக்கக்கூடியதுதான். இது வீட்டுக்குள்ள உள்ள பர்னிச்சர், மின்னணு சாதனங்களான கம்ப்யூட்டர், டி,வியில இருக்கக்கூடிய தூசிகளை உள்ள இழுத்துக்கிடும். இதனால நமக்கு சுகாதாரமான சூழல் அமையும். இந்த தாவரத்தையும்கூட நாசா அங்கீகரிச்சிருக்கு.

மூச்சுத்திணறல்

அழுது அத்தின்னு ஒரு செடி இருக்கு. இதையும்கூட படுக்கை அறையில வச்சா சுத்தமான காற்று கிடைக்கும். அது மட்டுமில்லாம தட்பவெப்ப நிலையை ஒழுங்கா வச்சிக்கிடும். இதுமாதிரி நிறைய செடிகள் இருக்கு. மூங்கில் செடியை வீட்டு முன்னாடி வளர்க்கிறது மட்டுமில்லாம வீட்டுக்குள்ள சின்னதா டேபிள் மேலயும் வளர்க்கலாம். இதுவும் காற்றை சுத்திகரிக்கக்கூடியதுதான். இந்தமாதிரி இன்னும் பல செடிகளுக்கு காற்றை சுத்திகரிக்கக்கூடிய தன்மை இருக்கு. அதையெல்லாம் வீடுகளுக்கு முன்னாடியும், உள்பகுதியிலயும் வளர்த்தா தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். மூச்சுத்திணறல், நுரையீரல் கோளாறு எதுவும் இல்லாம வாழலாம்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here