பாலக்காடு ஸ்டைல் தக்காளி சட்னி இந்த மாதிரி செஞ்சு பாருங்க ரொம்ப வாசனையா இருக்கும்!!

- Advertisement -

பாலக்காடு ஸ்டைலில் ஒரு சூப்பரான தக்காளி சட்னி இந்த மாதிரி செஞ்சு பாருங்க நீங்க. நிறைய காரச் சட்னி தக்காளி சட்னி செஞ்சுருப்பீங்க ஆனா இந்த மாதிரி பாலக்காடு ஸ்டைலில் தேங்காய் எண்ணெய் முழுக்க முழுக்க சேர்த்து செய்கிற தக்காளி சட்னி கண்டிப்பா அவ்ளோ ருசியா இருக்கும். இந்த தக்காளி சட்னிக்கு தேங்காய் துருவல், மல்லி இலைகள் எல்லாம் சேர்த்து செய்யும் போது வாசனையா சூப்பரா இருக்கும். அதைவிட நம்ம இதுக்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து செய்றதால மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

-விளம்பரம்-

ருசியான மணமான இந்த ரெசிபிக்கு கண்டிப்பாக எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. டேஸ்டான தக்காளி சட்னிக்கு எல்லாரும் 10 இட்லி கூட சாப்பிடுவாங்க. நிறைய ஸ்டைலில் தக்காளி சட்னி வச்சுருப்பீங்க ஆனா இந்த பாலக்காடு ஸ்டைல் தக்காளி சட்னியும் ஒரு தடவ உங்க வீட்ல ட்ரை பண்ணிதான் பாருங்களேன். இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும். சாதத்தில் கூட நீங்க போட்டு பிசைந்து சாப்பிடலாம். ரொம்பவே ருசியா இருக்கும் ஒரு தடவை ட்ரை பண்ணி பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி நீங்க இந்த ரெசிபியை செய்வீங்க.

- Advertisement -

பொதுவா பாலக்காடு பக்கம் கேரளா பக்கம் தேங்காய் எண்ணெய் சேர்த்து தான் சமையல் செய்வாங்க தேங்காய் எண்ணெய் சேர்த்து சமைக்கிறது உடம்புக்கு ஆரோக்கியமானதும் கூட. அதனால மிஸ் பண்ணாம கண்டிப்பா நீங்க ஒரு தடவை தேங்காய் எண்ணெய் வச்சு செய்யக்கூடிய இந்த தக்காளி சட்னியை செஞ்சு பாருங்க. நம்ம வீட்ல செய்யற தக்காளி சட்னி நாலு வீட்டுக்கு மணக்கும் யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கு இதை செஞ்சு கொடுத்து அசத்தலாம். இப்ப வாங்க இந்த ருசியான எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய பாலக்காடு ஸ்டைல் தக்காளி சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

பாலக்காடு தக்காளி சட்னி | Palakkad Tomato Chutney Recipe In Tamil

பாலக்காடு ஸ்டைலில் ஒரு சூப்பரான தக்காளி சட்னி இந்த மாதிரி செஞ்சு பாருங்க நீங்க. நிறைய காரச் சட்னி தக்காளி சட்னி செஞ்சுருப்பீங்க ஆனா இந்த மாதிரி பாலக்காடு ஸ்டைலில் தேங்காய் எண்ணெய் முழுக்க முழுக்க சேர்த்து செய்கிற தக்காளி சட்னி கண்டிப்பா அவ்ளோ ருசியா இருக்கும். இந்த தக்காளி சட்னிக்கு தேங்காய் துருவல், மல்லி இலைகள் எல்லாம் சேர்த்து செய்யும் போது வாசனையா சூப்பரா இருக்கும். அதைவிட நம்ம இதுக்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து செய்றதால மணமாகவும் ருசியாகவும் இருக்கும். ருசியான மணமான இந்த ரெசிபிக்கு கண்டிப்பாக எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. டேஸ்டான தக்காளி சட்னிக்கு எல்லாரும் 10 இட்லி கூட சாப்பிடுவாங்க. நிறைய ஸ்டைலில் தக்காளி சட்னி வச்சுருப்பீங்க ஆனா இந்த பாலக்காடு ஸ்டைல் தக்காளி சட்னியும் ஒரு தடவ உங்க வீட்ல ட்ரை பண்ணிதான் பாருங்களேன்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Side Dish
Cuisine: Indian, Kerala
Keyword: Palakkad Tomato Chutney
Yield: 5 People
Calories: 135kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 2 தக்காளி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 துண்டு இஞ்சி
  • 6 காய்ந்த மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து உளுந்தம் பருப்பு கருவேப்பிலை சேர்த்து வறுத்து கொள்ளவும்.
  • ஒரு துண்டு இஞ்சி காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து அனைத்தையும் தனியாக எடுத்துக் கொள்ளவும்.
  • அதே கடாயில் வெங்காயம் தக்காளி சிறிதளவு உப்பு கொத்தமல்லி இலைகள் தேங்காய் துருவல் சேர்த்து லேசாக வதங்கியதும் தனியாக எடுத்துக் கொள்ளவும்.
  • அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
  • தாளிக்க தேவையில்லை சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறினால் சுவையான பாலக்காடு ஸ்டைல் தக்காளி சட்னி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 135kcal | Carbohydrates: 2.6g | Protein: 9.8g | Fat: 4.1g | Sodium: 164mg | Potassium: 182mg | Fiber: 6.4g | Vitamin A: 84IU | Vitamin C: 131mg | Calcium: 22mg | Iron: 17mg

‌இதனையும் படியுங்கள் : ஆந்திரா கோவக்காய் சட்னி