தித்திக்கும் சுவையில் பலாப்பழம் பணியாரம் இப்படி செய்து பாருங்க! யாரும் வேண்டானு சொல்ல மாட்டாங்க!

palapala paniyaram
- Advertisement -

குழந்தைகளுக்கு என்ன டிபிரெண்டா செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ இது போன்று பலாப்பழ பணியாரம் செய்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவாங்க, அதுமட்டும் அல்லாமல் மீண்டும் மீண்டும் எப்பொழுது

-விளம்பரம்-

செய்விங்கனு கேட்டு தொல்லை பண்ணுவாங்க. இந்த ஸ்வீட் பணியாரம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -
palapalam paniyaram
Print
No ratings yet

பலாப்பழ பணியாரம் | Palapalam Paniyaram Recipe In Tamil

குழந்தைகளுக்கு என்ன டிபிரெண்டா செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ இது போன்று பலாப்பழ பணியாரம் செய்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவாங்க, அதுமட்டும் அல்லாமல் மீண்டும் மீண்டும் எப்பொழுது செய்விங்கனு கேட்டு தொல்லை பண்ணுவாங்க. இந்த ஸ்வீட் பணியாரம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Prep Time20 minutes
Active Time5 minutes
Total Time26 minutes
Course: Breakfast, Snack
Cuisine: Indian, TAMIL
Keyword: plapalam paniyaram, பலாப்பழ பணியாரம்
Yield: 4 people

Equipment

 • 1 பணியார கல்

தேவையான பொருட்கள்

 • ½ கிலோ பலா சோலை
 • ½ கப் வெல்லம்
 • 1 கப் மைதா மாவு
 • ½ ரவை
 • 1 பின்ச் உப்பு
 • ஏலக்காய் போடி கொஞ்சம்
 • நெய் தேவையான அளவு

செய்முறை

 • முதலில் பலா சோலையில் உள்ள கொட்டைகளை நீக்கி மிக்சியில் சேர்த்து மைய்ய அரைத்துக்கொள்ளவும்.
 • அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி நுணுகிய வெல்லத்தை சேர்த்து கரைந்ததும் வடிகட்டிக்கொள்ளவும்.
 • பிறகு அரைத்து வைத்துள்ள பலாப்பழத்தை ஒரு பௌலில் சேர்த்து அதில் கைத்துவைத்துல வெல்லத்தை ஊற்றி அத்துடன் மைதா மாவு, ரவை, உப்பு, ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து 20 நிமிடம் ஊறவிடவும். இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
 • பிறகு பணியார கல்லை அடுப்பில் வைத்து இலக்குழிகளிலும் நெய் ஊற்றி ஊறவைத்த கலவையை கரண்டியால் எடுத்து ஒவொரு குழிகளிலும் ஊற்றவும்.
 • இருபுறமும் வெந்ததும் அடுப்பை நிறுத்தவும்.

இதையும் படியுங்கள் : சூட சூட சுவையான முட்டை குழி பணியாரம் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க!