- Advertisement -
சுவையான முட்டை பணியாரத்தை இப்படி செய்து பாருங்கள். பணியாரம் என்றாலே எல்லோருக்கும் பிடித்தமான ஒரு ஸ்னாக்ஸ் வகையாக இருக்கிறது. பெரும்பாலும் நம்முடைய வீடுகளில் மீதமான இட்லி தோசை மாவை வைத்து தான் குழிப்பணியாரம் செய்வோம். குழந்தைகள் மட்டுமல்லாமல்
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : கேரளா ஸ்டைல் மினி அதிரசம் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
- Advertisement -
பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் இந்த பணியாரத்தை முட்டை போட்டு செய்யும் பொழுது ரொம்ப சூப்பராக இருக்கும். நான்வெஜ் பிரியர்களுக்கு இந்த சுவையான முட்டை பணியாரம் எப்படி எளிதாக செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
முட்டை குழி பணியாரம் | Egg Kuli Paniyaram Recipe in Tamil
சுவையான முட்டை பணியாரத்தை இப்படி செய்து பாருங்கள். பணியாரம் என்றாலே எல்லோருக்கும் பிடித்தமான ஒரு ஸ்னாக்ஸ் வகையாக இருக்கிறது. பெரும்பாலும் நம்முடைய வீடுகளில் மீதமான இட்லி தோசை மாவை வைத்து தான் குழிப்பணியாரம் செய்வோம். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் இந்த பணியாரத்தை முட்டை போட்டு செய்யும் பொழுது ரொம்ப சூப்பராக இருக்கும். நான்வெஜ் பிரியர்களுக்கு இந்த சுவையான முட்டை பணியாரம் எப்படி எளிதாக செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
Yield: 4 People
Calories: 95kcal
Equipment
- 1 கடாய்
- 1 பணியாரக்கல்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 2 முட்டை
- 1 கப் இட்லி மாவு
- 6 சின்ன வெங்காயம் நறுக்கியது
- 2 பச்சை மிளகாய்
- 1 கொத்து கருவேப்பிலை
- 1/4 Tsp கடுகு
- 1/2 Tsp உளுந்த பருப்பு
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேயைான அளவு
செய்முறை
- முதலில் வெங்காயத்தை நீளவாக்கிலும் பச்சைமிளகாய், கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும்.
- பின்னர் கலக்கி வைத்த முட்டையை இட்லி மாவுடன் ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைதது 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
- பின் எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பை சேரத்து தாளிக்கவும். பின் நாம் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்தது வதக்கவும்.
- பின் வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி பின் வதக்கிய பொருட்களை தனியாக எடுத்து வைக்கவும். பின்பு தாளித்த பொருட்களை முட்டை இட்லி மாவு கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- பின் குழிப்பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து பணியாரக்கல்லில் முக்கால்பாகம் அளவிற்கு ஊற்றவும்.
- அதன் பின்பு பணியாரம் ஒரு பக்கம் பொனாட்னிறமாக வெந்ததும் சினுக்கோலி வைத்து திருப்பிப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும். இரண்டு பக்கமும் வெந்தவுடனா சூட சூட பரிமாறலாம் அவ்வளவு தான் முட்டை பணியாரம் தயார்.
Nutrition
Serving: 500Gram | Calories: 95kcal | Carbohydrates: 45g | Protein: 13g | Potassium: 79mg | Sugar: 0.5g | Calcium: 2mg