- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- sweets
பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான உணவுப் பொருள் தான் பன்னீர். இந்த பன்னீர் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பன்னீரானது சைவ உணவாளர்கள் மட்டுமின்றி, அசைவ உணவாளர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருள். உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீர் பிரியர்களா? இதனால் அடிக்கடி வீட்டில் பன்னீர் செய்வீர்களா? பொதுவாக பன்னீர் வாங்கினால், சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா பன்னீர் பட்டர் மசாலா அல்லது கடாய் பன்னீர், பன்னீர் சாதம், மசாலா பன்னீர் என்று செய்வோம். ஆனால் இப்படி எத்தனை நாள் தான் ஒரே மாதிரி பன்னீரை சமைப்பீர்கள்.
அவ்வப்போது சற்று வித்தியாசமாகவும் செய்தால் தான் சாப்பிட நன்றாக இருக்கும். அப்படி என்ன வித்தியாசமான பன்னீர் ரெசிபி செய்வது என்று யோசனையாக உள்ளதா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் எப்போதும் ஒரே மாதிரியா பன்னீர் வைத்து காரசாரமாக எதுவும் செய்யாமல் இனிப்பாக ஒரு ரெசிபியை செய்து பாருங்கள். அந்த வகையில் இந்த பதிவில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான பன்னீர் பாயாசம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
பொதுவா நம்முடைய வீட்டில் ஏதாவது விசேஷங்கள் வந்தால் நாம் கேசரி செய்வோம் இல்லையென்றால் பால் பாயாசம் செய்வோம். ஆனால் சட்டுன்னு ஏதாவது ஒரு ஸ்வீட் செய்யணும்னா வீட்டில் பன்னீர் இருந்தால் அதை வைத்து பன்னீர் பாயாசம் செய்யுங்கள். இது சுவையானது மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதும் கூட. இந்த பாயாசத்தை விஷேச தினங்களில் மட்டும் செய்யாமல் நமக்கு தோன்றும் போதெல்லாம் செய்து கொள்ளலாம்.
வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் கூட இந்த ரெசிபியை செஞ்சு கொடுக்கலாம். பள்ளி விட்டு வர குழந்தைகளுக்கு ஏதாவது இனிப்பா ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுக்கணும்னா ஆசைப்பட்டால் கூட இந்த பாயாசத்தை ட்ரை பண்ணி பாருங்கள். இந்த ரெசிபியை ஒரு தடவை செஞ்சு பாருங்கள் அதுக்கப்புறம் உங்க வீட்ல அடிக்கடி இந்த பாயாசம் ரெசிபி இருக்கும் அந்த அளவுக்கு இந்த சூப்பரா இருக்கும். இப்போது வாருங்கள் எல்லா குழந்தைகளுக்கும் பெரியவங்களுக்கும் ரொம்ப ரொம்ப பிடிச்ச மாதிரியான ஸ்வீட் ரெசிபியான பன்னீர் பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஜப்பான் பன்னீர் ரெசிபி இந்த மாதிரி தான் செய்யணும்!!
Ingredients
Method
ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பால் சேர்த்து நன்கு காய்ச்சவும்.
பால் நன்கு காய்ந்ததும் கோவா, சர்க்கரை சேர்த்து பத்து நிமிடங்கள் நன்கு சுண்ட காய்ச்சவும்.
பின் பன்னீரை துருவி சேர்த்து அதனுடன் ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்து பத்து நிமிடங்கள் நன்கு காய்ச்சி இறக்கவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து பாலில் சேர்த்து, அதனுடன் நறுக்கிய பாதாம், பிஸ்தா சேர்த்து கலந்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான பன்னீர் பாயாசம் தயார்.






