சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது என்றால் அந்த இன்பத்திற்கு அளவே இல்லை. சில சுவாரஸ்யமான உணவுகளை நாமே சமைத்து உள்ளது என்பது பெரும் இன்பத்தைத் தரும். அப்படி ஒரு ரெசிபியை இந்த பதிவில் காணலாம். கோடை காலமாக இருந்தாலும் சரி, அடைமழையாக இருந்தாலும் சரி, பப்பாளி பழங்கள் நமக்கு எப்போதுமே கிடைக்கும். அந்தவகையில் பப்பாளிபழத்தை வைத்து உங்கள் குழந்தைகளுக்கு விருப்பமான கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
நம்முடைய அன்றாட உணவுகளுடன் கட்டாயம் சேர்க்க வேண்டிய ஒரு பழம் தான் பப்பாளி. இது கலோரிகளில் குறைவாக இருப்பதைத் தவிர நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது. மேலும், உங்கள் எடையைக் குறைக்க உதவதோடு, கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. தமனிகளில் கொலஸ்ட்ரால் உருவாவதை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி பெரிதும் உதவும். வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவற்றின் வளமான ஆதாரமாக உள்ள பப்பாளி, உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது நோய்கள் மற்றும் தொற்று நோய்களை விலக்கி வைக்க உதவுகிறது.
இதில் கேக் செய்து கொடுத்தால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இதனை அனைத்து விசேஷ தினங்கள், வீட்டில் பிறந்த நாள், திருமண நாள், சுப தினங்கள் போன்றவற்றின் போது வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுக்கலாம். ஒரு பப்பாளி பழத்தை நறுக்கினால் சில சமயம் சாப்பிட முடியாமல் போகலாம். அப்போது வீணாக்காமல் இது மாதிரி கேக் செய்து சுவைக்கலாம். பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு இதனை வைத்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இதனை ருசித்து சாப்பிடுவார்கள்.
பப்பாளி கேக் | Papaya Cake Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 ஓவன்
தேவையான பொருட்கள்
- 1 பப்பாளி
- 1 கப் பால்
- 1 கப் சர்க்கரை
- 1 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
- 10 முந்திரி பருப்பு
- 10 உலர் திராட்சை
- 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
- 1 கப் மைதா மாவு
செய்முறை
- முதலில் பப்பாளி பழத்தை கழுவி விட்டு தோல் சீவி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் பால், சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பவுளுக்கு அரைத்த பப்பாளி விழுதை மாற்றி அதனுடன் மைதா மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும். பின் இதனுடன் முந்திரி பருப்பு, உலர் திராட்சை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- பின் ஒரு பாத்திரத்தில் பட்டர் பேப்பர் வைத்து கேக் மாவு கலவையை ஊற்றவும். பின் ஓவனை பிரீ ஹீட் செய்த அவனில் 180 டிகிரி செல்சியஸ்ஸில் 30 நிமிடங்கள் பேக் செய்யவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பப்பாளி கேக் தயார். இது ஆறியவுடன் வெட்டி துண்டுகள் போட்டு டீ டைம்மில் பரிமாறவும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!