வீட்டிலயே ஸ்வீட்ஸ் சாப்பிட நினைத்தால் சூப்பராக பப்பாளி மைசூர் பாக் இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க!

- Advertisement -

மைசூர் பாக் ‌பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பான உணவு. கோதுமை மைசூர் பாக், நெய் மைசூர் பாக், சாக்லேட் மைசூர் பாக் என பல்வேறு வகையான மைசூர் பாக்குகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே மைசூர் பாக் செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. பப்பாளி பழத்தை வைத்து சுவையான மைசூர் பாக் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். நம்முடைய அன்றாட உணவுகளுடன் கட்டாயம் சேர்க்க வேண்டிய ஒரு பழம் தான் பப்பாளி. இது கலோரிகளில் குறைவாக இருப்பதைத் தவிர நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது. மேலும், உங்கள் எடையைக் குறைக்க உதவதோடு, கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.

-விளம்பரம்-

வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. தமனிகளில் கொலஸ்ட்ரால் உருவாவதை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி பெரிதும் உதவும். வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவற்றின் வளமான ஆதாரமாக உள்ள பப்பாளி, உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது நோய்கள் மற்றும் தொற்று நோய்களை விலக்கி வைக்க உதவுகிறது. இதில் மைசூர் பாக் செய்து கொடுத்தால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இதனை அனைத்து விசேஷ தினங்கள், வீட்டில் பிறந்த நாள், திருமண நாள், சுப தினங்கள் போன்றவற்றின் போது வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுக்கலாம்.

- Advertisement -

சத்துக்கள் நிறைந்த பப்பாளி பழத்தில் செய்த இந்த மைசூர் பாக் மிகவும் சுவையாக இருக்கும். இதை செய்ய கொஞ்சம் நேரம் எடுக்கும். ஒரு பப்பாளி பழத்தை நறுக்கினால் சில சமயம் சாப்பிட முடியாமல் போகலாம். அப்போது வீணாக்காமல் இது மாதிரி ஸ்வீட் செய்து சுவைக்கலாம். இதனை ஒரு முறை செய்து பக்குவமாக எடுத்து வைத்தால் 4 முதல் 5 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு இதனை வைத்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இதனை ருசித்து சாப்பிடுவார்கள்.

Print
No ratings yet

பப்பாளி மைசூர் பாக் | Papaya Mysore Pak Recipe In Tamil

மைசூர் பாக் ‌பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பான உணவு. கோதுமை மைசூர் பாக், நெய் மைசூர் பாக், சாக்லேட் மைசூர் பாக் என பல்வேறு வகையான மைசூர் பாக்குகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே மைசூர் பாக் செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. பப்பாளி பழத்தை வைத்து சுவையான மைசூர் பாக் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். நம்முடைய அன்றாட உணவுகளுடன் கட்டாயம் சேர்க்க வேண்டிய ஒரு பழம் தான் பப்பாளி. இது நோய்கள் மற்றும் தொற்று நோய்களை விலக்கி வைக்க உதவுகிறது. இதில் மைசூர் பாக் செய்து கொடுத்தால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இதனை அனைத்து விசேஷ தினங்கள், வீட்டில் பிறந்த நாள், திருமண நாள், சுப தினங்கள் போன்றவற்றின் போது வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுக்கலாம். சத்துக்கள் நிறைந்த பப்பாளி பழத்தில் செய்த இந்த மைசூர் பாக் மிகவும் சுவையாக இருக்கும். இதை செய்ய கொஞ்சம் நேரம் எடுக்கும்.
Prep Time10 minutes
Active Time20 minutes
Total Time30 minutes
Course: sweets
Cuisine: Indian
Keyword: Papaya Mysore Pak
Yield: 4 People
Calories: 62kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பெரிய தட்டு

தேவையான பொருட்கள்

  • 1 சிறிய பப்பாளி
  • 1 கப் பால்
  • 1/2 கப் கடலை மாவு
  • 1 கப் நெய்
  • 1/2 கப் சர்க்கரை

செய்முறை

  • முதலில் பழுத்த பப்பாளி பழத்தை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
  • பின் ஒரு பௌலில் கடலைமாவு மற்றும் நெய் சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து நாம் அரைத்த பப்பாளி விழுது, பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
  • இந்த பப்பாளி கலவை கொஞ்சம் கெட்டியானதும் நாம் நெய் சேர்த்து கலந்து வைத்துள்ள கடலை மாவு கலவையை சேர்த்து கை விடாமல் நன்கு கலந்து விடவும்.
  • பின் மீண்டும் நெய் சேர்த்து நன்கு கலந்து விடவும். இவை எல்லாம் ஒன்று சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாமல் நன்கு சுருண்டு வந்ததும் இதை எடுத்து ஒரு தட்டில் ஊற்றி ஆற விடவும்.
  • சூடு ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும். அவ்வளவுதான் மிகவும் சுவையான மற்றும் வித்தியாசமான பப்பாளி மைசூர் பாக் தயார். இது ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

Nutrition

Serving: 450g | Calories: 62kcal | Carbohydrates: 8g | Protein: 7.9g | Fat: 1.6g | Sodium: 3mg | Potassium: 257mg | Fiber: 2.5g | Sugar: 11.3g | Vitamin A: 1094IU | Vitamin C: 61.8mg | Calcium: 24mg | Iron: 2.1mg

இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் வாயில் பப்பாளி பழ லட்டு இப்படி வீட்டிலயே எளிமையாக செய்து விடலாம் அவசியம் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!