- Prep
- 20 min
- Cook
- 20 min
- Total
- 40 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Kulambu, LUNCH
இன்று நாம் காரசாரமான மிளகு குழம்பு பற்றி தான் பார்க்க போகிறோம் பொதுவாகவே வீட்டில் அனைத்து காய்கறிகளும் இருக்கும் போதே மறுநாள் என்று எந்த உணவு சமைப்பது என்ற ஆழ்ந்த சிந்தனையில் நாம் மூழ்கி போவோம். ஆனால் வீட்டில் காய்கறிகள் இல்லை என்ற சூழ்நிலை வரும் பொழுது அப்போது இந்த காரசாரமான மிளகு குழம்பை செய்து பாருங்கள் இதன் சுவை அட்டகாசமான முறையில் இருக்கும்.
இதையும் படியுங்கள் : செட்டிநாடு பிரண்டை கார குழம்பு செய்வது எப்படி ?
இந்த குழம்பை எளிமையான முறையில் செய்து விடலாம் இதற்காக எந்தவித காய்கறிகளும் தேவைப்படாது. இந்த குழம்பை செய்து நீங்கள் வெறும் அப்பளத்தை சைடிஷாக வைத்து சோறு சாப்பிட்டு விடலாம் அந்த அளவிற்கு இந்த குழம்பு அற்புதமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு குழம்பு வகையாக இருக்கும். அதனால் இன்று இந்த சாரசரமான மிளகு குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
English Overview: pepper kulambu is one of the most important dishes in india. pepper kulambu recipe or pepper kulambu seivathu eppadi or pepper kulambu in Tamil are a few important terms to describe this recipe in the tamil language
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும். அதனுடன் மிளகு, மல்லி, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் வர மிளகாய் சேர்த்து ஒரு ஒரு நிமிடம் வறுக்கவும் பின் இதனுடன் சீரகம் மற்றும் சிறிது கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள்.
அதன் பின்பு நாம் வறுத்த பொருட்களை சிறிது நேரம் குளிர வைத்துக்கொண்டு பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடாயில் கடுகு, மிளகு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய் சேர்த்து 10 வினாடிகள் சேர்த்து தாளிக்கவும். பின் இனிதுனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் அதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். பின் ஒரு எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்து கரைத்த புளி கரைசலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின் இதனுடன் ஒரு சிட்டிகை பெருங்காயம், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு 15 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். பின்பு எண்ணெயும் குழம்பு தனியாக பிரிந்து வந்தவுடன் இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் காரசாரமான மிளகு குழம்பு தயார்.






