- Advertisement -
நீங்கள் இட்லி, தோசை, சப்பாத்திகளுக்கு சில குறிப்பிட்ட வகை சட்னிகளை மட்டும் சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போது கண்டிப்பாக இதை வீட்டில் செய்து பாருங்கள். ஆம் சுவையான பூண்டு சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள் நீங்கள் இதற்கு முன் இந்த மாதிரியான சட்னியை செய்து சாப்பிட்டிருக்க மாட்டீர்கள். ஒரு தடவை நீங்கள் வீட்டில் செய்து சாப்பிடுங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்து விடும் உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு சட்னியாக மாறிவிடும். சுவையான பூண்டு சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள் பார்க்கலாம்.
-விளம்பரம்-
சுவையான பூண்டு சட்னி செய்வது எப்படி ?வாருங்கள் பார்க்கலாம்…
ஒரு 100 கிராம் பூண்டில் தண்ணீர்ச்சத்து 62 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் புரோட்டீன் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடும், நாச்சத்து 0.8 விழுக்காடும் உள்ளது. கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லி கிராமும் சிறிதளவு வைட்டமின் பி வகைகளும் உள்ளன.
Yield: 3
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 100 கிராம் பூண்டு பற்கள்
- புளி சிறிது
- கருவேப்பிலை சிறிது
- ½ tbso கடுகு
- 10 வர மிளகாய்
- நல்லெண்ணெய் ஒரு குழி கரண்டி
- ½ tbsp வெந்தயம்
- உப்பு தேவயான அளவு
செய்முறை
- செய்முறை
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணையை ஊற்றி என்னை சூடாகும் வரை காத்திருக்கவும் எண்ணெய் சூடாகியவுடன் அதில் வர மிளகாய் போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்.
- வரமிளகாய் பொன்னிறமாக வந்தவுடன் அது எண்ணெய் இல்லாமல் எடுத்துக் கொள்ளுங்கள் பின்பு நாம் தோலுரித்து வைத்திருக்கும் பூண்டு பற்களை அதே கடாயில் ஒரு நான்கு நிமிடங்கள் போட்டு வதக்கவும்.
- பூண்டு நன்றாக வதங்கிவிட்டது என்பதை பார்ப்பதற்கு பூண்டின் தோல் பகுதி நன்றாக சுருங்கும் அப்படி சுருங்கி விட்டால் பூண்டு நன்றாக வதங்கி விட்டது என்று அர்த்தம்.
- இப்போது வறுத்து வைத்துள்ள வரமிளகாயையும், வதக்கி வைத்துள்ள பூண்டையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளுங்கள்.
- பின்பு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நெல்லிக்காய் அளவிற்கு புளி சேர்த்து, அதன் கூடவே தண்ணீர் அதிகமாக சேர்க்காமல் மையாக அரைத்து கொள்ளுங்கள்.
- பின்பு அரைத்து வைத்துள்ள சட்னியை ஒரு பவுளில் எடுத்து வைத்து விட்டு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணையை ஊற்றுங்கள்.
- எண்ணெய் சூடு ஏறியதும் கடுகு போடவும், கடுகு பொரிந்த பிறகு பெருங்காயம் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். இப்படி தாளித்ததை சட்னியின் மேல் ஊற்றி நன்றாக கிளறி விடுங்கள்.
- இப்பொழுது சுவையான பூண்டு சட்னி தயாராகி விட்டது இதை உங்களுக்கு பிடித்தமான உணவுகளுடன் வைத்து இதை சாப்பிடுங்கள் இப்போது.
Nutrition
Serving: 3person | Carbohydrates: 29.8g | Protein: 6.3g | Fat: 0.1g | Fiber: 0.8g | Calcium: 30mg | Iron: 1.3mg
- Advertisement -