- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
உங்கள் வீட்டில் சப்பாத்தி அதிகம் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு கொண்டு அடிக்கடி சைடு டிஷ் செய்வீர்களா? அதுவும் ஒரே சுவையில் தான் சைடு டிஷ்ஷை செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் அடுத்தமுறை காரசாரமான ஸ்டைலில் உருளைக்கிழங்கு முட்டை மசாலா செய்யுங்கள். இந்த உருளைக்கிழங்கு முட்டை மசாலா மிகவும் டேஸ்டியாக இருக்கும்.
முக்கியமாக இப்படி உருளைக்கிழங்கு ரெசிபி செய்யும் போது வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கை கொண்டு வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் எவ்வாறு உருளைக்கிழங்கு முட்டை மசாலா செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த உருளைக்கிழங்கு முட்டை மசாலா இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். இந்த ருசியான உருளைக்கிழங்கு முட்டை மசாலா சில நிமிடங்களில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சுலபமாக செய்திடலாம். இந்த உருளைக்கிழங்கு முட்டை மசாலா சாப்பிடுவதற்கு வித்தியாசமான சுவையில் ரொம்பவே சூப்பரா இருக்கும். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான உருளைக்கிழங்கு முட்டை மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : முட்டை வைத்து சுவையான முட்டை கீமா கறி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
Ingredients
Method
முதலில் முட்டை மற்றும் உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கி அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து வதக்கவும்.
பின் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் வேகவைத்த முட்டையை இரண்டாக நறுக்கி சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு முட்டை மசாலா தயார்.






