- Advertisement -
எப்பொழுதும் இட்லி, தோசைக்கு, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று அரைத்து சாப்பிடாமல் இது போன்று புது விதமாக புடலங்காய் சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான டேஸ்டில் இருக்கும். மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.
-விளம்பரம்-
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
- Advertisement -
புடலங்காய் சட்னி | Pudalagai Chutney Recipe In Tamil
எப்பொழுதும் இட்லி, தோசைக்கு, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று அரைத்து சாப்பிடாமல் இது போன்று புது விதமாக புடலங்காய் சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான டேஸ்டில் இருக்கும். மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- கடாய்
தேவையான பொருட்கள்
- புடலங்காய் சிறிது
- 2 டீஸ்பூன் உளுந்து
- 2 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1 வெங்காயம் நறுக்கியது
- உப்பு தேவையான அளவு
- காய்ந்த மிளகாய் காரத்திற்கேற்ப
- கடுகு, சீரகம், கருவேப்பிலை, பெருங்காயம் தாளிக்க சிறிதளவு
செய்முறை
- முதலில் புடலங்காய், வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பருப்பு, மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- அடுத்து அதில் நறுக்கிய புடலங்காய், மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- வதங்கியதும் அதனை தனியாக எடுத்து வைத்து ஆறவிடவும்.
- ஆறியதும் அதனை மிக்சியில் சேர்த்து அத்துடன் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த சட்னில் சேர்த்து பரிமாறவும்.