- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- sweets
பொதுவாக இனிப்பு என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் அல்வா என்றால் சொல்லவா வேண்டும். அல்வா தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகவும் புகழ்பெற்றது. இது சர்க்கரை, நெய் ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படுகிறது. அதன் நாக்கில் வைத்ததும் கரைகின்ற சுவையை நிச்சயம் எல்லோருமே விரும்புவோம். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அல்வா என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. அல்வாவில் ஏராளமான வகை உள்ளன. கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா, பிரட் அல்வா, திருநெல்வேலி அல்வா, கோதுமை அல்வா என பல வகைகள் உள்ளன.
இவைகளை நாம் சுவைத்தும் இருப்போம். அல்வா என்று வரும் போது பலரும் கோதுமை அல்வா, அசோகா அல்வா போன்றவற்றை தான் அதிகமாக சாப்பிட்டு இருப்போம். ஆனால், நீங்கள் பாதாம் வைத்து செய்யப்படும் பஞ்சாபி பாதாம் அல்வா செய்து சுவைத்தது உண்டா? ஒரு முறை செய்து பாருங்கள் சுவை அட்டகாசமாக இருக்கும். இந்த ரெசிபியை வீட்டிலுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை நீங்கள் ஒரு முறை செய்து ருசித்தால் போதும் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். அத்தனை சுவையானதாக இருக்கும். இப்போது சுவையான பஞ்சாபி பாதாம் அல்வா எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : அடுப்பே இல்லாம ஒரு முறை பாதாம் பிசின் பாயாசம் இப்படி செஞ்சு பாருங்க! வாயில் வைத்ததும் கரைந்தோடும் ருசியிலன அட்டகாசமா இருக்கும்!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சர்க்கரை, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து எடுக்கவும்.
பின் பாதாமை சிறிது நேரம் ஊற வைத்து, தோல் நீக்கி மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதன்பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் கோதுமை மாவை சேர்த்து சிறிது நேரம் கலந்து விடவும்.
பின் அரைத்து வைத்துள்ள பாதாமை சேர்த்து நன்கு கலந்து, நாம் காய்ச்சி வைத்துள்ள சர்க்கரை பாகு மற்றும் நெய் சேர்த்து சிறிது நேரம் கைவிடாமல் நன்கு கலந்து விடவும்.
நெய் நன்கு பிரிந்து பாதாம் நன்கு கலர் மாறி வந்ததும் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான பஞ்சாபி ஸ்டைல் பாதாம் அல்வா தயார்.






