- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- sweets
எல்லாருமே கடைகளில்தான் போய் ஹாட் சாக்லேட் வாங்கி குடிச்சி இருப்போம். ஆனா இன்னைக்கு நம்ம வீட்டிலேயே ஹாட் சாக்லேட் எப்படி செய்வது என்று பார்க்க போறோம் இது கடைகளில் வாங்கி குடிச்சாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும் அப்படின்னு நினைச்சிருப்போம் ஆனால் வீட்டில் ஹோட்டல் ஸ்டைல்ல பெரிய பெரிய ரெஸ்டாரன்ட் எல்லாம் கிடைக்கிற மாதிரியான ஸ்டைலில் செய்ய முடியும். அதுலையும் இன்னைக்கு நார்மல் ஹாட் சாக்லேட் இல்லாம ராகி ஹாட் சாக்லேட் ஆரோக்கியமான முறையில் செய்யப் போறோம்.
ஒரு சிலருக்கு ஹாட் சாக்லேட் ரொம்ப ஃபேவரட்டா இருக்கும். அத ரெஸ்டாரண்ட்ல போய் குடிக்கிறதுக்கு முடியாமல் கூட இருக்கலாம். அந்த மாதிரி இருக்கிறவங்க வீட்டிலேயே ரொம்பவே ஹெல்தியான முறையில் ஹாட் சாக்லேட் செஞ்சு குடிங்க. குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். குழந்தைகளுக்கு மட்டுமில்லாம வீட்ல இருக்க கூடிய பெரியவங்களுக்குமே இந்த ஹாட் சாக்லேட் ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு ரெசிபியா மாறிடும். கண்டிப்பா ஒரே ஒரு தடவை மட்டும் செஞ்சு பாருங்க. அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இந்த குளிர்காலத்தில் அடிக்கிற மழைக்கு மாலை நேரத்தில் டீ காபிக்கு பதிலா இந்த ராகி மாவு வச்சு ராகி ஹாட் சாக்லேட் செஞ்சு பாருங்க.
குளிருக்கு குடிக்கிறதுக்கு இதமா இருக்கும். ஸ்வீட் சாப்பிட பிடிக்கும் அப்படின்னா இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல செஞ்சு அசத்துங்க. ஒரு தடவை செஞ்சு கொடுங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க.வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் கூட இத செஞ்சு கொடுத்து பாருங்க.ரொம்பவே விரும்பி குடிப்பாங்க.இது செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி தான்.சீக்கிரத்துல செய்து முடிச்சுடலாம்.இப்ப வாங்க இந்த சுவையான ஆரோக்கியமான சிம்பிளான ராகி ஹாட் சாக்லேட் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : குழந்தைங்க ஸ்வீட் கேட்டாங்கன்னா எப்பவும் ஒரே மாதிரியா செய்யாம இந்த டிஃபரண்டான ராகி மன்னி செஞ்சு கொடுங்க!
Ingredients
Method
பாத்திரத்தில் நெய் சேர்த்து ராகி மாவை சேர்த்து 10 நிமிடம் வறுத்துக் கொள்ளவும்.
அது சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதித்ததும் கொக்கோ பவுடர் நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
பால் சேர்த்து நன்றாக கலந்ததும் தேவையான அளவு டார்க் சாக்லேட் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
நன்றாக ஒன்று சேர்ந்து வந்த பிறகு ஒரு டம்ளரில் ஊற்றி துருவிய டார்க் சாக்லேட் தூவி பரிமாறினால் சுவையான ராகி ஹாட் சாக்லேட் தயார்.






