இந்த ஸ்வீட் ரெசிபி பெயர் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். இந்த ஸ்வீட்ட நீங்க உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க எப்பவுமே ஒரே மாதிரியா கேசரி பொங்கல் பாயாசம் அப்படின்னு செய்யாம வித்தியாசமா இந்த கர்நாடகா ஃபேமஸ் ரெசிபியை செஞ்சு பாருங்க. ராகி நம்ம உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது அதை வச்சு நம்ம செய்ற இந்த ரெசிபி ரொம்ப உடம்புக்கு ஆரோக்கியமானது. போறேன் இதுல வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் நாட்டு சர்க்கரை சேர்த்து செஞ்சா இன்னும் ஆரோக்கியமானதா இருக்கும்.
இது உடுப்பி மங்கள் ஒரு போன்ற இடங்களில் ரொம்ப ஃபேமஸான ஒரு டெசர்ட். உங்க குழந்தைகளுக்கு கண்டிப்பா இந்த டெசட்டை ஒரு தடவை செஞ்சு கொடுங்க கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங்க. ஆரோக்கியமான இந்த ஸ்வீட்ட உங்க வீட்ல இருக்குற எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க வீட்டுக்கு யாராவது விருந்தளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இந்த ஸ்வீட்ட செஞ்சு குடுங்க ரொம்ப ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பர் ஸ்பெஷலான ராகி மன்னி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
ராகி மன்னி | Ragi Manni Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் ராகி
- 1/2 கப் தேங்காய் துருவல்
- 1 கப் நாட்டு சர்க்கரை
- 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 3 டேபிள் ஸ்பூன் நெய்
- 1/2 டீஸ்பூன் உப்பு
செய்முறை
- ராகியை எட்டு மணி நேரம் ஊற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
- இப்பொழுது அதில் இருந்து பால் எடுத்து அதனை ஒரு கடாய்க்கு மாற்றிக் கொள்ளவும்.
- அதனுடன் நாட்டுச் சர்க்கரை ஏலக்காய் தூள் சிட்டிகை உப்பு 1 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்.
- 15 நிமிடங்கள் நன்றாக வெந்து வந்ததும் இறுதியாக ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றி ஒரு தட்டிற்கு மாற்றி செட் ஆனதும் உங்களுக்கு விரும்பிய வடிவத்தில் வெட்டிக் கொண்டால் சுவையான ராகி மன்னி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ராகி மாவு வச்சு ஒரு சூப்பரான ஐஸ்கிரீம் செய்யலாம் வாங்க!!