ராகி மாவுல ஐஸ்கிரீமா அப்படின்னு யோசிக்கிறீங்களா ஆனா ஒரு தடவை இந்த ராகி மாவுல ஐஸ்கிரீம் செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் மத்த எந்த பிளேவருமே உங்களுக்கு பிடிக்காது ராகி மாவு வச்சு மட்டும் தான் ஐஸ்கிரீம் செய்வீங்க உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானதும் கூட. உங்க வீட்ல இருக்குற குழந்தைகள் ஐஸ்கிரீம் வேணும்னா அடம்பிடிச்சா கடையில போய் வாங்கி கொடுக்காதீங்க வீட்லயே ராகி மாவு இருந்தா இந்த ராகி மாவை வச்சு சூப்பரான ஐஸ்கிரீம் செஞ்சு கொடுங்க.
இந்த ஐஸ்கிரீமை கண்டிப்பா உங்க குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க குழந்தைகள் மட்டும் இல்லாம வீட்ல இருக்குற பெரியவங்களும் கூட விரும்பி சாப்பிடுவாங்க காரணம் இந்த ராகி மாவுல நிறைய சத்துக்கள் இருக்கு. ராகி மாவு வச்சு செஞ்சு கொடுக்கிற அடை கொழுக்கட்டை எதுவுமே குழந்தைங்க சாப்பிட மாட்டேங்கிறாங்க அப்படின்னா அவங்களுக்கு புடிச்ச மாதிரி ராகி மாவு வச்சு ஐஸ் கிரீம் செஞ்சு குடுங்க ராகி மாவு சாப்பிட்ட மாதிரியும் ஆச்சு ஐஸ்கிரீம் சாப்பிட்ட மாதிரியும் ஆச்சு. இப்ப வாங்க ராகி மாவை வைத்து செய்யக்கூடிய ஒரு சிம்பிளான ஐஸ்கிரீம் எல்லாருக்கும் புடிச்ச மாதிரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ராகி ஐஸ்கிரீம் | Ragi Icecream Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 3 கப் பால்
- 1 1/2 கப் ராகி மாவு
- 1/2 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
- 1 கப் விப்பிங் கிரீம்
- 1 கப் நாட்டு சர்க்கரை
- 10 பாதாம்
- 10 பிஸ்தா
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் ராகி மாவை சேர்த்து அதனுடன் பால் சேர்த்து கலந்து மாவு கெட்டியாகும் வரை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
- அதனுடன் நாட்டு சர்க்கரை மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து ஆற வைத்துக் கொள்ளவும்.
- விப்பிங் கிரீமை மிக்ஸி ஜாரில் சேர்த்து கெட்டியாக அடித்து அதனுடன் ராகி மாவு கலவையை சேர்த்து நன்றாக கலந்து ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் சேர்த்துக் கொள்ளவும்.
- அதன் மேல் பொடியாக்கிய பாதாம் மற்றும் பிஸ்தாவை சேர்த்து எட்டு மணி நேரம் ஃப்ரீஸருக்குள் வைத்து எடுத்தால் சுவையான ராகி ஐஸ்கிரீம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : குளு குளுனு பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம், வீட்டிலேயும் சுலபமாக இப்படி செய்ய அசத்துங்க!