- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
உளுந்து வடை, பருப்பு வடை, வாழைப்பூ வடை, வெங்காய போண்டா, முட்டை போண்டா அப்படின்னு நிறைய ரெசிபி செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா கொஞ்சம் வித்தியாசமா ரவை வச்சு இந்த மாதிரி ஒரு ரவா வடை செஞ்சு பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும். ரவை வைத்து உப்புமா கேசரி ரவா தோசை இந்த மாதிரி ரெசிபி செஞ்சிருப்பீங்க ஆனா இந்த ரவா வடை ரொம்பவே வித்தியாசமான ஒரு ரெசிபியாக இருக்கும். ரவை வைத்து உப்புமா செய்தால் வீட்டில் இருக்கிறவங்க சாப்பிடாம இருக்காங்கண்ணா இந்த மாதிரி அவங்களுக்கு வடை செஞ்சு கொடுக்கலாம். இந்த டேஸ்டான ரவா வடை கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
இந்த ரவா வடை ரொம்ப வித்தியாசமானது ரவையை கொதிக்கிற தண்ணீரில் சேர்த்து நல்ல வேகவைத்து அதுக்கப்புறம் இந்த வடை செய்யணும். வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை இதெல்லாம் சேர்த்து செய்யும் போது சூப்பரா இருக்கும். நம்ம மெதுவடை எப்படி செய்றமோ அதே மாதிரி தான் செய்யணும் உளுந்துக்கு பதிலா இதுல ரவை சேர்க்க போறோம். நல்லா புசுபுசுன்னு உளுந்து வடை மாதிரியே இருக்கும். ரவை சேர்த்து செய்வதால் நல்லா மொறு மொறுப்பாகவும் இருக்கும். எப்பவும் ஒரே மாதிரியா ரெசிபிஸ் செய்யாமல் இந்த மாதிரி வித்தியாசமா செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான ரவா வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கோதுமை ரவை மட்டன் பிரியாணி
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து ரவையை சேர்த்து நன்றாக வேக வைத்து கெட்டியானதும் எடுத்துக் கொள்ளவும்.
அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் சீரகம், மிளகு, கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வடை போன்று தட்டிக் கொள்ளவும்.
அதனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான ரவா வடை தயார்.






