குழந்தைகளுக்கு பிடித்த ரெட் வெல்வெட் கேக் இப்படி ஈஸியா வீட்டிலே செய்து பாருங்க!

- Advertisement -

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் அனைவராலும் விரும்பப்படும் மற்றும் யாராலும் வெறுக்கப்படாத, சிவப்பு வெல்வெட் கப்கேக்குகள் உங்கள் வாயில் உருகும் அளவுக்கு ஈரமாக உணர்கின்றன.அவற்றின் சிவப்பு நிறமும், நறுமணமும், பிறந்தநாள் அல்லது ஆண்டுவிழாவின்போது சிவப்பு வெல்வெட் கேக்குகளை எப்படி செய்வது என்று எப்போதும் ஆச்சரியப்பட வைக்கும். ரெட் வெல்வெட் கப்கேக் ரெசிபியை எளிதில் தயாரிக்கலாம், ஏனெனில் நீங்கள் மிகவும் சிக்கலான படிகளை நினைவில் கொள்ள வேண்டியதில்லை. சில நிமிடங்களில் நீங்கள் அதைச் செய்து முடிக்கலாம்.

-விளம்பரம்-
Print
No ratings yet

ரெட் வெல்வெட் கேக் | Red Velvet Cake Recipe in Tamil

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் அனைவராலும் விரும்பப்படும் மற்றும் யாராலும் வெறுக்கப்படாத, சிவப்பு வெல்வெட் கப்கேக்குகள் உங்கள் வாயில் உருகும் அளவுக்கு ஈரமாக உணர்கின்றன.அவற்றின் சிவப்பு நிறமும், நறுமணமும், பிறந்தநாள் அல்லது ஆண்டுவிழாவின்போது சிவப்பு வெல்வெட் கேக்குகளை எப்படி செய்வது என்று எப்போதும் ஆச்சரியப்பட வைக்கும். ரெட் வெல்வெட் கப்கேக் ரெசிபியை எளிதில் தயாரிக்கலாம், ஏனெனில் நீங்கள் மிகவும் சிக்கலான படிகளை நினைவில் கொள்ள வேண்டியதில்லை. சில நிமிடங்களில் நீங்கள் அதைச் செய்து முடிக்கலாம்.
Prep Time15 minutes
Active Time20 minutes
Total Time35 minutes
Course: sweets
Cuisine: American
Keyword: cake
Yield: 6 People
Calories: 267.75kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 பிரஷர் குக்கர்

தேவையான பொருட்கள்

  • 2 கப் மைதா மாவு
  • 3/4 கப் பொடித்த சர்க்கரை
  • 1/4 கப் கோகோ பவுடர்
  • 1 டீஸ்பூன் பேக்கிங்
  • 1/4 டீஸ்பூன் பேக்கிங்
  • 3/4 கப் உருக்கிய வெண்ணெய்
  • 1/2 கப் பால்
  • ரெட் கலர் ஜெல் சிறிதளவு
  • 1 டீஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ்
  • 1 டீஸ்பூன் வினிகர்

சுகர் சிர்ப் செய்ய :

  • 1 கப் சர்க்கரை
  • 1/4 கப் தண்ணீர்

கிரீம் செய்ய :

  • 1/2 கப் கிரீம்
  • 1/4 கப் சர்க்கரை தூள்
  • 1 டீஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ்

செய்முறை

  • மைதா, கோகோ, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா எல்லாம் சேர்த்து சலித்து வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு பௌலில் உருகிய பட்டர் சேர்த்து, அத்துடன் சர்க்கரை பவுடர் சேர்த்து வைத்து நன்கு பீட் செய்யவும்.
  • பின்பு வெனிலா எசென்ஸ் சேர்த்து கலக்கவும்.பின்னர் ரெட் கலர் சேர்ந்து நன்கு கலந்து விடவும்.
  • பின்னர் சலித்து வைத்துள்ள மாவு கலவையை சேர்த்து, பால் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • கடைசியாக வினிகர் சேர்த்து கலந்தால் ரெட் வெல்வெட் கேக் கலவை தயார்.
  • பின்பு வட்ட வடிவ கேக் பாத்திரத்தில் பட்டர் தடவி, பட்டர் பேப்பர் வைத்து தயாராக உள்ள கேக் கலவையை சேர்க்கவும்.
  • பின்னர் கேக் கலவையை குக்கரின் உள்ளே கவனமாக வைக்கவும். குக்கரை மூடி, தீயை குறைந்த அளவில் வைக்கவும்.
  • 30 – 40 நிமிடங்கள் வேக விடவும். குக்கரில் இருந்து இறக்கி பட்டர் பேப்பரை எடுத்து விட்டு அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.அந்த நேரத்தில் சுகர் சிரப் தயார் செய்து வைத்து கொள்ளவும்.
  • கேக்கின் மேல் தடவ கிரீம் தயாரிக்க ஒரு பௌலில் கிரீம் சீஸ், சுகர் பவுடர் சேர்த்து பீட் செய்து, அத்துடன் வைப்பிங் கிரீம் வெனிலா எசென்ஸ் சேர்த்து பீட் செய்யவும்.
  • கேக் சூடு முற்றிலும் ஆரியவுடன் கேக்கின் மேலே உள்ள அடுக்கை வெட்டி எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் கேக்கின் மேல் கிரீம் தடவி இரண்டு மணி நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்து பொடித்து வைத்துள்ள கேக் தூகள்களை தூவி, நடுவில் உங்கள் விருப்பப்படி அலங்கரிக்கவும்.
  • இப்போது மிகவும் சுவையான ரெட் வெல்வெட் கேக் தயார். தயாரான கேக்கினை துண்டுகள் போட்டு அனைவரும் சுவைக்கவும்.

Nutrition

Serving: 700g | Calories: 267.75kcal | Carbohydrates: 35.37g | Protein: 6.14g | Fat: 11.33g | Sodium: 250mg | Sugar: 58.4g
- Advertisement -