- Advertisement -
குழந்தைகளுக்கு இனிப்பாக என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவுதான் இது. சட்டுனு அரிசி பணியாரம் செய்து கொடுத்து பாருங்க மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த பணியாரம் சுலபமாகவும் செய்து விடலாம். இந்த மாறி செஞ்சி கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க ஆசை படுவார்கள்.
-விளம்பரம்-
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
- Advertisement -
அரிசி பணியாரம் | Rice Paniyaram Recipe In Tamil
குழந்தைகளுக்கு இனிப்பாக என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவுதான் இது. சட்டுனு அரிசி பணியாரம் செய்து கொடுத்து பாருங்க மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த பணியாரம் சுலபமாகவும் செய்து விடலாம். இந்த மாறி செஞ்சி கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க ஆசை படுவார்கள். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- பணியார கல்
தேவையான பொருட்கள்
- 400 கிராம் பச்சரிசி
- 100 கிராம் புழுங்கல் அரிசி
- 200 கிராம் உளுத்தம் பருப்பு
- 300 கிராம் சர்க்கரை
செய்முறை
- முதல் நாளே பச்சரிசியுடன், புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக்கொள்ளவும்.
- அடுத்து ஊறவைத்ததை அடுத்த நாள் மிக்சி அல்லது கிரைண்டரில் அரைத்துக்கொள்ளவும்.
- அரைத்த பிறகு அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கரைத்துக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு பணியார கல்லில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி கலந்து வைத்துள்ள மாவை ஒரு குளிக்கரண்டியால் எடுத்து ஊற்றவும்.
- ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் மற்றும் சுற்றிலும் திருப்பி விட்டு வேக விடவும்.
- இப்பொழுது அரிசி பணியாரம் தயார். சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம்.