- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
ரோட்டுக்கடை உணவுகள் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ரோட்டுக்கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசித்து எடுத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம்..! கையேந்தி பவன் என சொல்லப்படும் ரோட்டுக்கடை உணவுகளின் ருசி பிடித்துவிட்டால் போதும், மக்கள் அடுத்தமுறை தேடி சென்று அந்த கடையில் உணவை உண்பார்கள். பெரிய பெரிய ஹோட்டல்களை காட்டிலும் கையேந்தி பவன்களில் இருக்கும் ருசியும் தரமும் மக்களை கவர்கிறது. அந்த வகையில் இந்த பதிவில் ரோட்டுக்கடையில் பரிமாறப்படும் வெங்காய சட்னி எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.
தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மாங்காய் சட்னி, புதினா சட்னி, மல்லி சட்னி, கதம்ப சட்னி அப்படின்னு நிறைய சட்னி வகைகள் சாப்பிட்டிருப்பீங்க. அந்த வகையில் இன்னைக்கு நம்ம ரொம்பவே வித்தியாசமான ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கக்கூடிய ரோட்டுக்கடை வெங்காய சட்னி பாக்க போறோம். என்னதான் வீட்டில் சுவையாக சமைத்து கொடுத்தாலும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வீட்டில் செய்யும் உணவுப்பொருட்களை விட வெளி உணவகங்களில் சாப்பிடும் உணவுப் பொருட்களின் சுவைதான் மிகவும் பிடித்திருக்கும்.
அதுவும் இந்த ரோட்டுக்கடையில் கிடைக்கும் சட்னியின் சுவை மிகவும் அருமையாகத்தான் இருக்கும். இந்த சட்னி ரெசிபி இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும். இந்த ரெசிபியை ஒரு தடவை வீட்டில் செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். வாருங்கள்! ருசியான ரோட்டுக்கடை வெங்காய சட்னியை ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுவையான ரோட்டுக்கடை ஸ்டைலில் சுவரொட்டி வறுவல் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வர மிளகாய் மற்றும் புளி சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, தேங்காய் துருவல் கொத்தமல்லி சேர்த்து இரண்டு நிமிடங்கள் மட்டும் வதக்கி இறக்கவும்.
பின் ஒரு மிக்ஸியில் நாம் வதக்கிய அனைத்தையும் சேர்த்து அதனுடன் உப்பு, சீரகம் சேர்த்து நன்கு அரைத்து ஒரு பவுளுக்கு மாற்றிக் கொள்ளவும்.
ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும். அவ்வளவுதான் சுவையான ரோட்டுக்கடை வெங்காய சட்னி தயார்.






