- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
வாழைக்காய் பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி, அப்பள பஜ்ஜி அப்படின்னா விதவிதமா பஜ்ஜி சாப்பிட்டுருப்பீங்க. அதே மாதிரி பிரட் பஜ்ஜியும் சாப்பிட்டு இருப்பீங்க ஆனால் இந்த மாதிரி ஒரு தடவை ஸ்டஃப்டு பிரட் பஜ்ஜி செஞ்சு பாருங்க. இதுக்கு நம்ம ஒரு உருளைக்கிழங்கு மசால் தயார் செய்து அதை பிரட்டுக்கு நடுவுல வச்சு அதுக்கு மேல இன்னொரு பிரட் வச்சி சூப்பரா செய்ய போறோம். அழகா கட் பண்ணி சாப்பிடும்போது சாப்பிடுவதற்கு அவ்வளவு சூப்பரா இருக்கும். இது கூட தக்காளி சாஸ் வச்சு சாப்பிட்டாலும் ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும்.
குழந்தைகள் சாண்ட்விச் கேட்டாங்கன்னா அவங்களுக்கு இந்த மாதிரி செஞ்சு கொடுத்திருங்க ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. நார்மல் ஆக பிரட் பஜ்ஜி சாப்பிடுறதை விட இந்த மாதிரி ஸ்டஃப்டு பிரட் பஜ்ஜி சாப்பிட்டா டேஸ்ட் இன்னுமே அட்டகாசமா இருக்கும் ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்களே அடிக்கடி செய்வீங்க. கொஞ்சம் இனிப்பா இருக்க கூடிய பிரட் வாங்கிக்கோங்க அது இன்னுமே டேஸ்ட் கொடுக்கும். இந்த டேஸ்டான பிரட் பஜ்ஜிக்கு வீட்டில் இருக்கிற எல்லாருமே அடிமையாகிடுவாங்க சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த பிரட் வெஜ் ரெசிபியை மிஸ் பண்ணாம வீட்டுக்கு வர விருந்தாளிகளுக்கும் செஞ்சு கொடுங்க. ரொம்ப ரொம்ப ஈஸியா செஞ்சு முடிச்சிடலாம் இதுக்கு பஜ்ஜி மாவு வாங்கி அதுல கூட நீங்க போட்டு செய்யலாம். பஜ்ஜி மாவு இல்லனா கடலை மாவு சேர்த்து சூப்பரா பஜ்ஜி மாவு தயார் செய்து அதுக்கு அப்புறமா பிரட் பஜ்ஜி செய்யலாம். இந்த டேஸ்டான பிரட் பஜ்ஜி ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான பிரட் பஜ்ஜி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான பிரெட் கொத்து ரெசிபி இப்படி ஒரு தடவை செய்து கொடுத்துப் பாருங்கள்! மிச்சம் வைக்காமல் முழுவதையும் சாப்பிட்டு முடிப்பார்கள்!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கு மஞ்சள் தூள்,1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், நறுக்கி பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு பெருங்காயத்தூள் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பிரட் எடுத்து அதில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து தடவி அதன் மேல் மற்றொரு பிரட் வைத்து நன்றாக அழுத்தி வைக்கவும்.
அதனை பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு குறித்து எடுத்தால் சுவையான ஸ்டஃப்டு பிரட் பஜ்ஜி தயார்.






