- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, Side Dish
என்னதான் அசைவ பிரியர்களாக இருந்தாலும் அசைவம் தினமும் சாப்பிடுறவங்களா இருந்தாலும் இந்த புரட்டாசி மாதத்தில் சைவம் தான் சாப்பிட்டாகணும். அப்படி சைவம் சாப்பிட்டு ரொம்ப போர் அடிச்சு போனவங்க அசைவம் சுவையிலேயே ஏதாவது ரெசிபி கிடைக்காதா அப்படின்னு தேடிக்கிட்டே இருப்பீங்க. அந்த மாதிரி தேடிக் கொண்டே இருக்கிறவங்க மரவள்ளிக்கிழங்கு கிடைச்சா அதை வாங்கி சிக்கன் 65 சுவைல மரவள்ளி கிழங்கு 65 செஞ்சு பாருங்க. சுவை அவ்ளோ அட்டகாசமா இருக்கும். நீங்க நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இந்த 65 ஓட சுவை இருக்கும்.
வெஜிடபிள் பிரியாணி காளான் பிரியாணி, தக்காளி பிரியாணி இது எல்லாமே செஞ்சா அதுக்கு சைடு டிஷ்ஷா இந்த ரெசிபியை வைத்து சாப்பிட அவ்ளோ ருசியா இருக்கும். தயிர் சாதம் ரசம் சாதம் சாம்பார் சாதம் எல்லாத்துக்குமே ஒரு அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும். இந்த டேஸ்டான மரவள்ளிக்கிழங்கு 65 ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க அதுக்கு அப்புறமா அடிக்கடி செய்வீங்க ரொம்ப ரொம்ப ருசியான சிம்பிளான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.
ஈவினிங் டைம்ல ஸ்நாக்ஸ் மாதிரி கூட சாப்பிடலாம் அவ்வளவு ருசியா இருக்கும். கடையில போய் வாங்காம வீட்டிலேயே இந்த மாதிரி ஆரோக்கியமான முறையில செஞ்சு பாருங்க. இதை செய்ததற்கு ரொம்ப ரொம்ப குறைவான நேரம் தான் தேவைப்படும். நிறைய எண்ணெய் தேவைப்படாது. குறைவான எண்ணெய் வச்சு சூப்பரான ரெசிபியை செஞ்சு முடிச்சிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்ட்டான அசைவ சுவையில் இருக்கக்கூடிய மரவள்ளிக்கிழங்கு 65 ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : உங்கள் வீட்டில் மரவள்ளிக்கிழங்கு இருந்தா சட்டுனு இதை வைத்து காலை உணவிற்கு பூ போன்ற இட்லி செய்து பாருங்கள் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!!
Ingredients
Method
மரவள்ளிக்கிழங்கை சுத்தம் செய்து ஒரு குக்கரில் போட்டு ஒரு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
அதனை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கருவேப்பிலை தட்டிய பூண்டு சேர்த்து தாளிக்கவும்.
மரவள்ளி கிழங்கு சேர்த்து சிக்கன் 65 பொடி சேர்த்து நன்றாக கிளறவும்.
கிழங்கு நன்றாக வெந்து மொறுமொறுப்பாக ஆனவுடன் இறக்கினால் சுவையான மரவள்ளிக்கிழங்கு 65 தயார்.






