- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
பீட்ரூட் வைத்து பீட்ரூட் சாலட், பீட்ரூட் பொரியல், பீட்ரூட் பருப்பு கூட்டு, பீட்ரூட் ஜூஸ், பீட்ரூட் அல்வா அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. பீட்ரூட் வைத்து சிப்ஸ் கூட செய்யலாம் ரொம்பவே அருமையாக இருக்கும் ஆனா இன்னைக்கு நம்ம பீட்ரூட் வைத்து ஒரு சூப்பரான வடை ரெசிபி செய்ய போறோம். எப்பவுமே வீட்ல ஒரே மாதிரியா உளுந்த வடை பருப்பு வடை அப்படின்னு செஞ்சு சாப்பிடாம கொஞ்சம் வித்தியாசமாக இந்த மாதிரி பீட்ரூட் வடையும் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இந்த பீட்ரூட் வடைக்கு நம்ம பொட்டுக்கடலையை அரைத்து சேர்த்து செய்ய போறோம் அதனால டேஸ்ட் வித்தியாசமாகவே இருக்கும்.
ஒரு சிலருக்கு கடலை மாவு சேர்த்து செய்கிற ரெசிப்பிஸ் ஒத்துக்காம இருக்கும் அந்த மாதிரி இருக்கிறவங்க இந்த பீட்ரூட் வடையை ட்ரை பண்ணி பாருங்க. பீட்ரூட் சாப்பிடுவதால் இரத்த சோகை பிரச்சனை சரியாகும் கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி பீட்ரூட் சாப்பிடுவது ரொம்ப ரொம்ப நல்லது. ஒரே மாதிரியா பீட்ரூட் வச்சு பொரியல் செஞ்சு சாப்பிட போரடிக்குது அப்படின்னா இந்த மாதிரி பீட்ரூட் வடை ஒரு தடவ செஞ்சு பாருங்க. ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். இந்த டேஸ்டான ருசியான பீட்ரூட் வடை ரெசிபியை மிஸ் பண்ணாம உங்க வீட்ல இருக்கறவங்களுக்கு செஞ்சு கொடுங்க. சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே இந்த ரெசிபியை ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான பீட்ரூட் வடை ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காலை டிபனுக்கு சூப்பரான பீட்ரூட் இடியாப்பம் ஒரு முறை இப்படி வீட்டில் செஞ்சி பாருங்கள்!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் பீட்ரூட்டை துருவி சேர்த்துக் கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை சீரகம் சேர்த்து அரைத்து அந்த பொடியையும் பீட்ரூட்டுடன் சேர்த்துக் கொள்ளவும்.
நறுக்கி பெரிய வெங்காயம் கொத்தமல்லி இலைகள் கருவேப்பிலை பச்சை மிளகாய் அரிசி மாவு தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவையில்லை.
பிசைந்து வைத்ததை சிறு உருண்டைகளாக எடுத்து தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பீட்ரூட் வடை தயார்.






