- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast, evening
தினமும் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், பூரி என்று செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அதே நேரத்தில் மிக எளிமையான ரெசிபியை செய்ய வேண்டுமா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். பொதுவாக காலை உணவினை சத்தான ஆகாரமாக எடுத்துக் கொண்டால் தான் அன்றைய தினம் முழுவதும் நாம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். அப்படிப்பட்ட சத்தான காலை உணவினை தான் இன்று நாம் காண உள்ளோம்.
எந்த நேரம் சாப்பிடாமல் இருந்தாலும், காலையில் மட்டும் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. பெரும்பாலானோர், காலையில் எழுந்து சமைத்து சாப்பிட சோம்பேறித்தனப்பட்டோ அல்லது அலுவலகத்திற்கு நேரம் ஆகிவிட்டது என்று சரியாக சாப்பிடாமல் செல்கின்றனர். அத்தகையவர்களுக்கு எளிதான முறையிலும், ஆரோக்கியமான வகையிலும் முட்டை வைத்து ஈஸியான முறையில் ஒரு ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். பொதுவாக முட்டையை சாதாரணமாக ஆம்லேட் செய்து சாப்பிடுவோம்.
ஆனால் இதை பொரித்து சில மசாலாக்கள் சேர்த்து எப்படி ஒரு சுவையான சில்லி ஆம்லெட் செய்வதென்று பார்க்கலாம். இந்த முட்டை ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலை உணவிற்கு மட்டுமல்லாமல் மாலை நேர சிற்றுண்டி யாகவும் டீ, காபியுடன் சாப்பிடலாம். காலை வேளையில் குழந்தைகளுக்கு பிடித்தவாறு மிகவும் எளிமையான காலை உணவு செய்ய வேண்டுமானால் இந்த முட்டை ரெசிபியை செய்து கொடுங்கள். இது மிகவும் ஈஸியான காலை உணவாகும். இப்போது சுவையான சில்லி ஆம்லெட் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : புதினா முட்டை வறுவல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும்!!
Ingredients
Method
முதலில் ஒரு பவுளில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள முட்டையை சேர்த்து இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும். பின் அதனை சதுரமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பவுளில் மைதா மாவு, சோள மாவு, உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள முட்டையை மைதா மாவு கலவையில் நன்கு பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு சதுரமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து அதனுடன் தக்காளி சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு வதக்கவும்.
பின் நாம் பொரித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து நன்கு வதக்கி கொத்தமல்லி சிறிதளவு தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான சில்லி ஆம்லெட் தயார்.






