- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
பொதுவா சப்பாத்தியை அப்படியே சாப்பிடுவதை விட ஒரு சிலருக்கு கொத்து சப்பாத்தி சில்லி சப்பாத்தி செஞ்சு சாப்பிடுறது ரொம்ப பிடிக்கும். அந்த வகையில சப்பாத்தி மீதம் ஆயிடுச்சு அப்படின்னா அதை அப்படியே இரு துணில சுத்தி வச்சு இந்த மாதிரி ஒரு தடவை முட்டை சில்லி சப்பாத்தி செஞ்சு பாருங்க ரொம்ப அட்டகாசமா இருக்கும். இதுக்கு எண்ணெயில் மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போனதும் சப்பாத்தியை சதுர வடிவில் நறுக்கி நல்லா வறுத்து எடுத்துக்கணும்.
அதுக்கப்புறம் உங்க கிட்ட என்ன காய்கறிகள் இருந்தாலும் அதை சேர்த்து முட்டையையும் சேர்த்து ஒரு சூப்பரான மசாலா ரெடி பண்ணி அதுல சப்பாத்தி போட்டு நல்ல பிரட்டி கொத்தமல்லி இலைகள் எல்லாம் சேர்த்து இறக்குனா கம கமன்னு சாப்பிடுறதுக்கே ஆசையா இருக்கும். இந்த ரெசிபியில் நம்ம முட்டைக்கோஸ் மற்றும் கேரட் சேர்த்து இருக்கிறோம். உங்ககிட்ட என்ன காய்கறிகள் இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை மட்டும் செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் கண்டிப்பா அடிக்கடி செய்ய தோணும். இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே அடிமை ஆகிடுவாங்க.
சுட சுட இரவு டிபனுக்கும் மதியம் லஞ்சுக்கும் சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியாக இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபிக்கு சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே போட்டி போட்டு சாப்பிடுவாங்க. மீதமான சப்பாத்தியில் தான் இதனை செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. பிரஷ்ஷா சப்பாத்தி செஞ்சு கூட அதுல நீங்க இந்த ரெசிபியை செஞ்சு பார்க்கலாம். இந்த சுவையான டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான முட்டை சில்லி சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஆனியன் சப்ஜி சப்பாத்திக்கு இந்த மாதிரி செஞ்சு பாருங்க பத்து சப்பாத்தி கூட சாப்பிடலாம்!!
Ingredients
Method
சப்பாத்தியை சதுர வடிவில் நறுக்கி ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து ஒரு டீஸ்பூன் மிளகாய் தூளையும் சேர்த்து சப்பாத்தி சேர்த்து நன்றாக ரோஸ்ட் செய்து எடுக்கவும்.
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
நறுக்கிய கேரட் முட்டைகோஸ் மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
முட்டையையும் உடைத்து ஊற்றி நன்றாக கிளறி சப்பாத்தியை சேர்த்து நன்றாக கலந்து கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான முட்டை சில்லி சப்பாத்தி தயார்.






