- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 2
- Cuisine
- Indian
- Course
- evening, snacks
வீட்ல பிரட் வாங்கினால் அதை வச்சு பிரட் ஆம்லெட் செய்வாங்க பிரட் சாண்ட்விச் செய்வாங்க பிரட் அல்வா செய்வாங்க. இந்த மாதிரி நிறைய செய்வாங்க ஆனா இன்னைக்கு நம்ம பிரட் அப்படி இல்லன்னா பாவ் பன் வைத்து இந்த சூப்பரான கார்லிக் பிரட் ரெசிபி செஞ்சு பாருங்க. ஈவினிங் டைம்ல சாப்பிடுறதுக்கு ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபி இது. இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பாக வீட்ல ஒரு தடவை செஞ்சு அசத்துங்க. இத காலைல டைம்ல பிரேக்ஃபாஸ்ட்டா கூட சாப்பிடலாம். கார்லிக் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது அதை வச்சு இந்த சூப்பரான பிரட் ரெசிப்பி செஞ்சா அவ்ளோ டேஸ்டா இருக்கும்.
இந்த கார்லிக் பிரட் ரெசிபி செய்றதுக்கு கார்லிக் நல்லா எண்ணெயில் போட்டு வதக்கி மசிச்சு செய்யணும் இதுல பட்டர் சில்லி ஃபிளேக்ஸ் மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் இது எல்லாமே போட்டு செய்யும் போது டேஸ்ட் ரொம்ப ரொம்ப அற்புதமாக இருக்கும். ஒருதடவை செஞ்சு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறமா அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டான ஒரு ரெசிபி இது. குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா வீட்ல ஒரு தடவ செஞ்சு அசத்துங்க. இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான கார்லிக் பிரட் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஸ்வீட் பிரெட் டோஸ்ட் ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பூண்டு பற்களை சேர்த்து வறுத்து ஆற வைத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
அதனுடன் பட்டர் சில்லி பிளேக்ஸ் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பாவ்பன் எடுத்து அதில் மேல் உள்ள பகுதியை நீக்கிவிட்டு கீழ் உள்ள பகுதியில் கலந்து வைத்துள்ளதை தடவிக் கொள்ளவும். அதன் மேல் சிறிதளவு சில்லி ஃப்ளேக்ஸ் கொத்தமல்லி இலைகள் தூவி விடவும்.
ஒரு தோசை கல்லில் பட்டர் தடவி அதற்கு மேல் தயார் செய்து வைத்துள்ளதை வைத்து தேவையான அளவு சீஸ் சேர்த்து மூடி போட்டு மூடி வைத்து வேக வைத்து எடுத்தால் சுவையான கார்லிக் பிரெட் தயார்.






